02 July 2008

துணுக்குகள்

1.அது என்ன வீரப்பன் வெடி ?
மற்ற வெடியை வெடிச்சா கந்தக வாசம் வரும். .. இந்த வெடியை வெடிச்சா சந்தன வாசம் வரும் * _______________________________________________________
2.அது என்ன வீரப்பன் வெடி ?
பத்தவெச்சா அது பாட்டுக்குப் பேசாமலே இருக்கும். திடீர்னு நாம எதிர்பார்க்காத நேரத்துல வெடிச்சிடும் * _______________________________________________________
3.அது என்ன வீரப்பன் வெடி ?
இது வெடிக்கற சத்தம் போலீஸ் காரங்க தவிர, மத்த எல்லோருக்கும் கேட்கும் *
_______________________________________________________
4.அது என்ன வீரப்பன் வெடி ?
ஒரே இடத்தில் வெடிக்காம இடம் மாறி மாறிப் போய் வெடிச்சுக்கிட்டே இருக்கும் *
_______________________________________________________
5.எல்லா வி.ஐ.பி-யும் ஒரே இடத்துல கூடி, வர்ற ராக்கெட் வெடியை அண்ணாந்து பார்த்துக்கிட்டிருக்காங்களே. .. என்னவாம். .?
அதுவா. .. வீரப்பன் அதுல வெச்சு ஏதோ காஸெட் அனுப்பியிருக்கானாம் * _______________________________________________________
6.என்ன இது, போலீஸ்காரங்கள்லாம் கூட்டமா சந்தனக்காட்டுக்குப் போறhங்க.. . வீரப்பனைப் பிடிக்கவா.. .?
இல்லீங்க.. . வீரப்பன் கிட்டே தீபாவளி மாமூல் வாங்கறதுக்கு * _______________________________________________________
7.அப்பா. .. தீபாவளிக்கு நீங்க வைரமோதிரம் செய்து போடாம உங்க மாப்பிள்ளை இனி இங்கே வரவே மாட்டாராம். ..
நிஜமாவா.. .? ரொம்ப சந்தோஷம். .. அப்புறம் முடிவை மாத்திக்க மாட்டாரே ? _______________________________________________________
8.என்ன இது. கூட்டணி வெடின்னு சொன்னீங்க. ஆனா, இந்தக் கட்டுல ஒரே ஒரு வெடிதான் வெடிக்குது.
என்ன செய்யறது. கூட்டணில அந்த ஒரு வெடிக்கு மட்டும்தான் எல்லா பவரும்.
_______________________________________________________
9.கள்ளக் கணக்கு எழுதறதுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமப் போயிடுச்சு.
எதைச் சொல்றீங்க ?
தரைச் சக்கரத்துக்கு பஞ்சர் ஒட்டியதாக கணக்குக் காட்டியிருக்காங்க * _______________________________________________________
10.சங்கு சக்கரம் மாதிரி நீ வளைய வளைய வர்றதையும் மத்தாப்பு மாதிரி நீ சிரிக்கிறதையும் பாத்துட்டு, ராக்கெட் வேகத்துல என்னை லவ் பண்றேன்-னு அந்தப் பட்டாசுக் கடைக்காரர் பெண்ணுக்கு லவ் லெட்டர் எழுதினியே.. . என்ன ஆச்சு ?
புஸ்வாணமாதான் * _______________________________________________________
11.பட்டாசை வெச்சுக்கிட்டு எதுக்கு ஜெனரேட்டரைப் போடறhரு.. ?
எலெக்ட்ரிக் பட்டாசாம். .. கரண்ட் கட்டாம் * _______________________________________________________
12.அனுமதி இல்லாம பட்டாசுக்கடை வெச்சிருக்கீங்களே. .. அதிகாரிங்க வந்து கேட்க மாட்டாங்களா ?
அனுமதி வாங்கி கடை வெச்சா மட்டும் அதிகாரிங்க வந்து கேட்காமலா இருக்கப் போறhங்க * _______________________________________________________
13.மோதிர விரல்லே தேள் கொட்டிடுச்சுன்னு மாப்பிள்ளை சந்தோஷமா குதிக்கிறhர்.. .
ஏன் ?
விரல்வீங்கிப் போச்சாம். .. தீபாவளிக்கு மாமனார் பெரிய மோதிரமாத்தான் போட வேண்டி வருமாம் * _______________________________________________________
14.நாம அரசியல் பேசினது போதும். .. கொஞ்சம் ஆன்மீகம் பேசுவோமே.. . வாழ்க்கைலே ரொம்பவும் ஒட்டிக்காம பட்டதும் படாததுமா தாமரை இலை தண்ணீர் போல. ..
த.மா.கா-லே சிதம்பரம் போலன்னு சொல்லுங்க. ..* _______________________________________________________
15.இதுதாங்க கிரிக்கெட் வெடி *
இதுல என்ன ஸ்பெஷல். ..?
பெட் கட்டினாதான் வெடிக்கும் * _______________________________________________________
16.மாப்பிள்ளை வீட்டார் தீபாவளிக்கு பஸ்ல வர்றhங்கன்னதும் ஏன் தலையில கைவெச்சு உட்கார்ந்துட்டீங்க.. .?
தனி பஸ் வெச்சுக்கிட்டு வர்றhங்களாம் * _______________________________________________________
17.எங்கப்பாவுக்கு எதையுமே முறைப்படிதான் செய்து பழக்கம்.. .
அதுக்காக அவர் ராக்கெட் விடறதுக்கு, என்னை நுhறலிருந்து கௌண்ட் டௌன் எண்ணச் சொல்றது டூ மச் * _______________________________________________________
18.சித்தி, சத்யா, கோகிலா, வைதேகினு புது வெடிங்க வந்திருக்கு போலிருக்கே. ..?
பழைய லட்சுமி, சரஸ்வதி வெடிங்கதான். .. டி.வி. பாதிப்புல பெயர் மாறி வந்திருக்கு *
_______________________________________________________
19.என்னோட மாமனாருக்குப் பிரமாண்டமா செலவு பண்ணியே பழகிப்போச்சு. ..
தலைதீபாவளிக்கு உனக்கு என்ன பண்றhர்..?
தங்கக் கம்பிமத்தாப்பு செய்ய ஆசாரிகிட்டே ஆர்டர் கொடுத்துட்டு வந்திருக்காருன்னா பாரேன் * _______________________________________________________
20.என்னப்பா. .. சம்பிமத்தாப்புல இவ்ளோ பெரிய கம்பியெல்லாம் இருக்குது *
இந்த மத்தாப்பை நீங்க வெடிச்சு முடிச்சவுடனே, கம்பிகளைக் கட்டட வேலைக்குப் பயன்படுத்திக்கலாம் *
நன்றி ஆனந்த விகடன் 22-10-2000 _______________________________________________________
21.என் பையன் வெடியா கொளுத்திக் காசைக் கரியாக்கறhன் *
நீங்க என்ன பண்ணறீங்க.. ?
கசாப்புக்கடை வெச்சிருக்கேன் *
அப்ப நீங்க கறியைக் காசாக்கறீங்க * _______________________________________________________
22.பட்டாசுக்கடையிலே கோழி புகுந்துட்டதுக்கு இப்படிப் பதர்றியே.. ?
புகுந்தது நெருப்புக் கோழியாச்சே *
_______________________________________________________
23.தீபாவளிக்கு வந்த உங்க மாப்பிள்ளை மாடியை விட்டு இறங்காம அப்பப்ப காஸெட் கொடுத்துவிடறhரே. .. என்னவாம்.. .?
வைரமோதிரம் போடணும்ங்கற கோரிக்கையை நிறைவேத்தினாதான் கங்கா ஸ்நானம் பண்ணக் கீழே இறங்குவாராம் *
_______________________________________________________
24.என்ன.. . போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏகப்பட்ட nஜhடிங்க பெட்டி படுக்கையோட வந்திருக்காங்க ?
எல்லோரும் நம்ம ஸ்டேஷன்ல லவ்மேரேஜ; பண்ணிக்கிட்டவங்க. தலை தீபாவளிக்கு வந்திருக்காங்க *
_______________________________________________________
25.எதுக்கு சார் உங்க வீட்ல பட்டாசு வெடிக்க என்னைக் கூப்பிடறீங்க ?
ஆபீஸ்ல நீங்க நிறைய பேரோட வேலைக்கு வேட்டு வெச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். அதனாலதான் *
_______________________________________________________
26.எப்படிடா உனக்கு தீக்காயம் பட்டுது ?
ஆட்டம் பாமை பத்த வெச்சப்போ, மழை துhறினதால நனையாம இருக்க பக்கத்துல நின்னு குடை பிடிச்சேன் *
_______________________________________________________
27.தலைவர் புஸ்வாணம் கொளுத்தி குழந்தை மாதிரி சந்தோஷப்படறhரே.. .
வத்தி வெக்கற வேலையாச்சே.. அவருக்கு பிடிக்காம போகுமா ?
நன்றி ஆனந்த விகடன் 22-10-2000 _______________________________________________________
28.உங்க பையன் எதுக்காக மண்ல உருண்டு அடம் பிடிக்கிறhன் ?
அவனுக்கு ரோல் பட்டாசு வேணுமாம் *
_______________________________________________________
29.நேத்து உங்க பட்டாசுக் கடைக்கு வந்து துப்பாக்கியக் காட்டி மிரட்டியவன் வெச்சிருந்தது போலி துப்பாக்கின்னு எப்படி தெரிஞ்சுது ?
மரியாதையா இருக்கற ரோல் கேப் எல்லாத்தையும் குடுத்துடு-ன்னு தானே மிரட்டினான்.. .*
_______________________________________________________
30.யானை வெடி ஏம்பா ஈரமா இருக்கு ?
அது. .. நீர் யானை வெடிங்க.. .*
_______________________________________________________
31.இரயில் வெடின்னு சொல்றீங்க, கொளுத்திவிட்டா மெதுவா போகுதே ?
இது கூட்ஸ் இரயிலுங்க *
_______________________________________________________
32.எதிர் எதிர் பட்டாசுக் கடைக்காரங்களுக்குள்ள பிஸினஸ் போட்டியாமே.. .?
ஆமாம். ஒருத்தர் பாம்பு வெடி வாங்கி ஸ்டாக் வச்சார்னா, இன்னொருத்தர் கீரி வெடி வாங்கி ஸ்டாக் வச்சிருப்பாரு *
_______________________________________________________
33.கொஞ்ச நேரத்துக்கு முன்னால பயங்கர சத்தத்தோட வெடிச்சதே, அந்த வெடி ஒண்ணு கொடுங்க.. .
யோவ், விளையாடுறியா அப்ப வெடிச்சது டிரான்ஸ்ஃபார்மர் *
நன்றி குமுதம் 26-10-2000 _______________________________________________________
34.ஏம்மா உங்களுக்கு எத்தனாவது பர்த் ?
(கைகுழந்தையுடன்) இதுதாம்பா எனக்கு முதல் குழந்தை.
_______________________________________________________
35.ஓடி ஓடிச் சம்பாதிச்சதா சொல்றீங்களே, என்ன வேலை பார்த்தீங்க ?
பைனான்ஸ் கம்பெனி நடத்தினேன் *
_______________________________________________________
36.எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும் வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ?
இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும். ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான் *
_______________________________________________________
37.என்ன முதலாளி * ஆயுத பூiஜ எல்லாம் எப்படி ?
நம்ம கடையிலே ஆயுதம் ஏதப்பா காகிதப் பூiஜதான் நடக்குது.
_______________________________________________________
38.உங்களை பார்த்தா சிரிப்பா வருது *
ஏன் ?
நீங்க சந்தோஷ மூட்ல இருக்கிறதா சொன்னீங்களே.. . அதான் *
_______________________________________________________
39.நீங்க கட்டிவிட்ட பல் செட்டில் இருபத்தஞ்சு பல்தானே டாக்டர் இருக்கு ?
நீங்க ஃபீஸை குறைச்சீங்க. நான் பல்லை குறைச்சேன் அவ்வளவுதான் *
_______________________________________________________
40.நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?
இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறhங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க.
ஓ.கோ.. .* என்னை மாதிரி ஓசில.. . சாப்பிட வந்தவர்தானா நீங்களும். ..*
நன்றி குங்குமம் 27-10-2000 _______________________________________________________
41.வீரப்பன் செய்தியை டி.வி-யில் வாசிச்சு வாசிச்சு அந்த அம்மாவுக்கு ரொம்ப அலுத்துப் போச்சாம் *
அதுக்காக மீண்டும் சலிப்புச் செய்திகள்-னு சொல்லணுமா ?
_______________________________________________________
42.கச்சேரிக்குத் தலைமை வகிக்க அமைச்சரைக் கூப்பிட்டது தப்பாப் போச்சு *
ஏன்.. . என்ன ஆச்சு.. .?
அவர்கூட வர்றவங்களுக்கெல்லாம் இலவசமா ஜhல்ராவும், ஜpங்குச்சாவும் கொடுக்கணுமாம் *
_______________________________________________________
43.தலைவர் மகளிர் அணிப் பெண்கள்கூட நெருங்கிப் பழகினாரு ?
அப்புறம் ?
இப்ப புதுசா குழந்தைகள் அணி ஒண்ணு உருவாயிருச்சு *
_______________________________________________________
44.தலைவர் தனக்கு விழற துண்டுகள்ல கட்சிக்கறை இருக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாரு *
ஏன் ?
நாளைக்கே கட்சி மாறினாக்கூட துண்டு உபயோகமா இருக்கணுமாம் *
_______________________________________________________
45.ராஜ;கிரண், டைட்டானிக் படத்தைப் பார்த்துப் படம் எடுத்தால் என்ன பெயர் வைப்பார் ?
என்ன பெயர் ?
எல்லாமே என் கப்பல்தான் *
_______________________________________________________
46.உலகில் முதன் முதலில் சிறு வயதில் பிரதமர் ஆனவர் யார் ?
யார் ?
வாஜ;-பாய் *
_______________________________________________________
47.அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?
ஏன் ?
அது ஜhம் ஜhம்னு நடக்கற கல்யாணம் *
_______________________________________________________
48.காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன் ?
ஏன் ?
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு *
_______________________________________________________
49.முனிவரைப் பாம்பு பார்க்கும், ஏன் ?
ஏன் ?
அவர் முகத்துல தவ-களை இருக்கு *

No comments: