சின்னா ஒரு நாய்க்குட்டியை ஆசையாக வளர்த்து வந்தான். அதனுடன் பேசுவதும், விளையாடுவதுமாக*, ஹட்ச் நாய் + பையன் போல இருவரும் இணைபிரியாமல் இருந்து வந்தார்கள். சின்னாவுக்கு தன் நாய்க்குட்டிதான் உலகமாக இருந்தது.
இப்படி இருக்கையில் ஒருநாள் சின்னா பள்ளி சென்றிருக்கும் வேளையில் நாய்க்குட்டி காரில் அடிபட்டு பரலோகம் போய்விட்டது. அம்மா இதை எப்படி சின்னா எடுத்துக்கொள்வானோ என்று கவலைப்பட்டாள். மாலை சின்னா வந்தவுடன், நாய்க்குட்டியைத் தேடினான். அம்மா மெல்ல நடந்ததைச் சொல்லி,
" கவலைப்படாதே..சின்னா..! உன் நாய் எங்கும் போய்விடவில்லை.. இன்னேரம் கடவுளின் மடியில் இருக்கும்..!
சின்னா மெல்ல வினவினான்..
செத்துப்போன நாயை மடியில் வச்சுகிட்டு கடவுள் என்னம்மா பண்ணுவாரு..?
________________________________________________
நாய் கதையை சொன்னதும்தான் நினைவுக்கு வருகிறது. ஒருநாள் நம்ம மொக்கையை நாய் கடித்து விட்டது. வெறிநாய் ஆகையால், மொக்கையின் நிலைமை படு சீரியஸ் ஆகிவிட்டது. டாக்டரும் நாள் குறித்துவிட்டார்.
மொக்கையின் நண்பர் ஒருவர், கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்று போனார். அப்போது மொக்கை தீவிரமாக ஏதோ எழுதிக்கொண்டிருப்பதிப் பார்த்து கேட்டார்..
" ஹேய்.. மொக்கை.. டோன்ட் பி பேனிக்யா.. உயில் எழுத இப்போ என்ன அவசியம்..? "
மொக்கை சொன்னார்..
" எவன் சொன்னான்.. நான் உயில் எழுதறேன்னு..? நான் யார் யாரைக் கடிக்கணும்ன்னு லிஸ்டுல்ல தயார் பண்ணிகிட்டுருக்கேன்..!.. கொஞ்சம் இரு.. இதோ வந்துடுறேன்..!"
25 September 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment