28 June 2008

இப்படிக்கு.. உங்கள் நினைவில் வாடும் மனைவி.

பிரியமுள்ள கணவருக்கு,
வீட்டைப் பத்திரமாகப் பூட்டிக்கொண்டு போகிறீர்களா? புழக்கடையிலேயே சோப்பை வைத்துவிட்டுப் போய் விடாதீர்கள். வெய்யிலில் அது சாந்து மாதிரி ஆகிவிடும். வலை பீரோவை நன்றாகக் கவனிக்கவும். ஏதேனும் எறும்புகள் தென்படுகின்றனவா? வலை பீரோவின் கால்களுக்கு மறக்காமல் தண்ணீர் ஊற்றவும். கொஞ்சம் நெய் வைத்துவிட்டு வந்திருந்தேன். அதை என்ன செய்தீர்கள்? ஊறுகாய் கெடாமலிருக்கிறதா?
சலவைக்காரன் வந்தானா? பழைய பாக்கி துணிகளில் இரண்டு கொண்டு வரவேண்டும். மூன்றரையணா அவனே நமக்குத் தரவேண்டும். இந்தத் தடவை மொத்தமாக எத்தனை துணி போட்டீர்கள்? மூன்றாவது வீட்டிலே அந்தப் பையன் ஞானசம்பந்தம் அடிக்கடி வருகிறானா? அவன் வந்தால் நீங்கள் கூடவே இருங்கள். அவன் போன பிறகு எல்லாம் சரியாயிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். (அவனை வீட்டுக்குள் விடாமலிருப்பது ரொம்பவும் நல்லது.) எதிர்வீட்டில் 'காரம் போர்டு' வாங்கிக் கொண்டு போனார்கள். திருப்பிக் கொடுத்து விட்டார்களா? திருப்பிக் கொடுத்திருந்தால் காயினெல்லாம் சரியாயிருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கவும். ராத்திரியில் ரேடியோ கேட்கவேண்டாம். அணைக்க மறந்து போய் அப்படியே தூங்கிவிடுவீர்கள்.சாயிபாபா படத்துக்குப் பிரேம் போட்டு விட்டீர்களா? பிரேம் இல்லாவிட்டால் பரவாயில்லை என்பது என் அபிப்பிராயம். பிரேம் போடுகிற பணத்துக்கு புதிதாகவே வாங்கி விடலாம். காற்றில் ஜன்னல் அடித்துக் கொள்கிறதா? அதற்கு வைப்பதற்காக அளவாக ஒரு சின்னச் செங்கல் வைத்திருந்தேனே? அது இருக்கிறதா? படார் படாரென்று இரண்டு தடவை அடித்துக் கொண்டால் கதவு போய்விடும். ஜன்னல் திரையை நீங்களே சோப்புப் போட்டுத் துவைத்து விடுங்கள். சலவைக்குப் போனால் வருவதற்கு நாளாகும்.
புத்தக அலமாரிக்குச் சற்றுத் தள்ளி ஓட்டுப் பக்கமிருந்து வாலோடியாக ஒரு கரையான் சரம் இறங்கியிருந்ததே அதைத் தட்டிச் சுத்தம் செய்தீர்களா? சிறிது மண்ணெண்ணெய் புட்டியில் இருந்ததெல்லாம் தீர்ந்து விட்டதா? காப்பி போட்டுக் கொள்வதற்காகத் தினமும் எவ்வளவு மண்ணெண்ணெய் உபயோகப்படுத்துகிறீர்கள்? ஞபாகமாக ஆபீஸ் போகும்போது அடுப்பை அணைத்துவிட்டுப் போகவும். ஈரத்துணியை மழை வரும் போலிருந்தால் வீட்டுக்குள்ளேயே உலர்த்திவிட்டுச் செல்லவும். காய்ந்த துணிகளை மாலையில் ஆபீஸ் விட்டு வந்ததும் எடுத்து வைத்துவிடவும். மீட்டர் கட்டணம் எவ்வளவு ஆயிற்று? போன மாதத்தில் பணத்தை வரவு வைக்காமல் விட்டுவிட்டது பற்றி 'கம்ப்ளைண்ட்' செய்தீர்கலா

No comments: