25 September 2008

நிகழ்ச்சி ஆரம்பம்..!

மிஸ்டர்.மொக்கை வெட்டியாக ஊர் சுற்றுபவர். ஒருநாள் எங்கெங்கோ சுற்றிவிட்டு மாலையில் களைப்பாக வீடு திரும்பினார்.வந்த*தும் வராததுமாக, தொலைக்காட்சி ரிமோட்டை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, மனைவியை அதிகாரமாக அழைத்து,

"நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்குள் நல்ல காஃபி போட்டு எடுத்து வா..!"

என்று ஆணையிட்டார். திருமதி.மொக்கை தன் கணவரின் மீது கொலைவெறியில் இருந்தாலும், பேசாமல் போய் காபி போட்டுவந்து கொடுத்தார். காபியை கையில் கூட வாங்காத மொக்கை,

"காபின்னா.. வெறும் காபிதான் தருவியா..? ஓடு.. நிகழ்ச்சியைத் துவங்குவதற்கு முன் கொறிக்க ஏதாவது எடுத்து வா.."

என்று விரட்டினார். இம்முறையும் கணவரை மன்னித்துவிட்ட மனைவி, மறு பேச்சு பேசாமல் போய் மிக்சர் எடுத்து வந்தார்.

மிக்சரை கொஞ்சம் வாயில் போட்ட மொக்கை,

"சரி.. சரி.. மரம் போல நிற்காதே.. நிகழ்ச்சி ஆரம்பம் ஆகுமுன் மின்விசிறியை சுழல விடு.. அந்த டீபாயை நான் கால் வைத்துக்கொள்ள ஏதுவாக என் அருகே இழுத்துப்போடு. ம்ம்ம்ம் சீக்கிரம்..!"

என்று ஆணையிட்டார்.. பொறுமை எல்லை மீறிய திருமதி,
ஆவி பறக்கும் காபியை, மொக்கை தலையில் எடுத்து கொட்டினார்.கூடவே..

"என்னாய்யா அதிகாரம் தூள் பறக்குது..? வெட்டிச் சோறு தின்னும்போதே இவ்வளவு சவடாலா..? என்னிக்காவது உருப்படியா ஒரு காரியம் செய்திருக்கியா..? அப்படி என்ன நிகழ்ச்சி கொள்ளை போகப்போகுது..? ஒரேயடியா ஆடறே.. ஒடம்பு எப்படி இருக்கு..?

என்று குதறினாள். தலையில் ஊற்றப்பட்ட காபியை வழித்து விட்ட மொக்கை..முணுமுணுத்தார்..

"நிகழ்ச்சி ஆரம்பிச்சுருச்சு..!"

சில சிரிப்'பூ'க்கள்...

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

ooooooooooooooooooo

'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''

''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்''

''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.''

ooooooooooooooooooo

நண்பன்: ஏண்டா, உன் தாத்தா ரொம்ப நாளா கோமாவிலே இருந்துட்டு இப்போ எழுந்துட்டாராமே. முதல்லே என்ன கேட்டாரு?

மற்றவன்: நம்ப தியாகராஜ பாகவதர் படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு கேட்டாரு!

oooooooooooooooooooo

ஏம்பா, நான்தான் இந்த பத்திரிகைக்கு ஆயுள் சந்தா கட்டி இருக்கேனே, இப்போ திடீர்னு வருட சந்தா கேட்டா எப்படி?

பின்ன என்ன? நீங்க எழுபது வருடத்துக்கு முன்னாடியே ஆயுள் சந்தா கட்டி இருக்கீங்க! இவ்வளவு வருடம் உயிரோடு இருப்பீங்கன்னு நாங்க கண்டோமா!! சரி பணத்தை எடுங்க?''

ooooooooooooooooooo

நேரம் கிடைச்சா கீழே உள்ள வலைப்பூக்களுக்கு போய்ப் பாருங்க.. தவறாம உங்க கருத்துகளையும் பதிவு செய்யுங்க.

நன்றி நண்பர்களே..!

சின்னா + மொக்கை = டபுள் தமாக்கா..!

சின்னா ஒரு நாய்க்குட்டியை ஆசையாக வளர்த்து வந்தான். அதனுடன் பேசுவதும், விளையாடுவதுமாக*, ஹட்ச் நாய் + பையன் போல இருவரும் இணைபிரியாமல் இருந்து வந்தார்கள். சின்னாவுக்கு தன் நாய்க்குட்டிதான் உலகமாக இருந்தது.

இப்படி இருக்கையில் ஒருநாள் சின்னா பள்ளி சென்றிருக்கும் வேளையில் நாய்க்குட்டி காரில் அடிபட்டு பரலோகம் போய்விட்டது. அம்மா இதை எப்படி சின்னா எடுத்துக்கொள்வானோ என்று கவலைப்பட்டாள். மாலை சின்னா வந்தவுடன், நாய்க்குட்டியைத் தேடினான். அம்மா மெல்ல நடந்ததைச் சொல்லி,

" கவலைப்படாதே..சின்னா..! உன் நாய் எங்கும் போய்விடவில்லை.. இன்னேரம் கடவுளின் மடியில் இருக்கும்..!

சின்னா மெல்ல வினவினான்..

செத்துப்போன நாயை மடியில் வச்சுகிட்டு கடவுள் என்னம்மா பண்ணுவாரு..?
________________________________________________

நாய் கதையை சொன்னதும்தான் நினைவுக்கு வருகிறது. ஒருநாள் நம்ம மொக்கையை நாய் கடித்து விட்டது. வெறிநாய் ஆகையால், மொக்கையின் நிலைமை படு சீரியஸ் ஆகிவிட்டது. டாக்டரும் நாள் குறித்துவிட்டார்.

மொக்கையின் நண்பர் ஒருவர், கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்று போனார். அப்போது மொக்கை தீவிரமாக ஏதோ எழுதிக்கொண்டிருப்பதிப் பார்த்து கேட்டார்..

" ஹேய்.. மொக்கை.. டோன்ட் பி பேனிக்யா.. உயில் எழுத இப்போ என்ன அவசியம்..? "

மொக்கை சொன்னார்..

" எவன் சொன்னான்.. நான் உயில் எழுதறேன்னு..? நான் யார் யாரைக் கடிக்கணும்ன்னு லிஸ்டுல்ல தயார் பண்ணிகிட்டுருக்கேன்..!.. கொஞ்சம் இரு.. இதோ வந்துடுறேன்..!"