25 September 2008

நிகழ்ச்சி ஆரம்பம்..!

மிஸ்டர்.மொக்கை வெட்டியாக ஊர் சுற்றுபவர். ஒருநாள் எங்கெங்கோ சுற்றிவிட்டு மாலையில் களைப்பாக வீடு திரும்பினார்.வந்த*தும் வராததுமாக, தொலைக்காட்சி ரிமோட்டை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, மனைவியை அதிகாரமாக அழைத்து,

"நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்குள் நல்ல காஃபி போட்டு எடுத்து வா..!"

என்று ஆணையிட்டார். திருமதி.மொக்கை தன் கணவரின் மீது கொலைவெறியில் இருந்தாலும், பேசாமல் போய் காபி போட்டுவந்து கொடுத்தார். காபியை கையில் கூட வாங்காத மொக்கை,

"காபின்னா.. வெறும் காபிதான் தருவியா..? ஓடு.. நிகழ்ச்சியைத் துவங்குவதற்கு முன் கொறிக்க ஏதாவது எடுத்து வா.."

என்று விரட்டினார். இம்முறையும் கணவரை மன்னித்துவிட்ட மனைவி, மறு பேச்சு பேசாமல் போய் மிக்சர் எடுத்து வந்தார்.

மிக்சரை கொஞ்சம் வாயில் போட்ட மொக்கை,

"சரி.. சரி.. மரம் போல நிற்காதே.. நிகழ்ச்சி ஆரம்பம் ஆகுமுன் மின்விசிறியை சுழல விடு.. அந்த டீபாயை நான் கால் வைத்துக்கொள்ள ஏதுவாக என் அருகே இழுத்துப்போடு. ம்ம்ம்ம் சீக்கிரம்..!"

என்று ஆணையிட்டார்.. பொறுமை எல்லை மீறிய திருமதி,
ஆவி பறக்கும் காபியை, மொக்கை தலையில் எடுத்து கொட்டினார்.கூடவே..

"என்னாய்யா அதிகாரம் தூள் பறக்குது..? வெட்டிச் சோறு தின்னும்போதே இவ்வளவு சவடாலா..? என்னிக்காவது உருப்படியா ஒரு காரியம் செய்திருக்கியா..? அப்படி என்ன நிகழ்ச்சி கொள்ளை போகப்போகுது..? ஒரேயடியா ஆடறே.. ஒடம்பு எப்படி இருக்கு..?

என்று குதறினாள். தலையில் ஊற்றப்பட்ட காபியை வழித்து விட்ட மொக்கை..முணுமுணுத்தார்..

"நிகழ்ச்சி ஆரம்பிச்சுருச்சு..!"

No comments: