நம்ம மிஸ்டர். மொக்கை ஒருநாள் அலுவலகத்திலிருந்து களைப்பா வீட்டுக்கு வரும்போது, வழியில் ஒரு அழகான பொண்ணு, திரிஷா மாதிரி அழகுன்னு வச்சுக்கங்களேன்.. மொக்கையைப் பார்த்து கையசைத்து கூப்பிட்டாள்.. மொக்கை ஜொள்ளிகிட்டே போய் " வாட் கேன் ஐ டு ஃபார் யூ..?" என்று கேட்டார்..
ஹாய்.. ஹேண்ட்சம்..(????!).. ஒரு சின்ன ஹெல்ப்.. என் கார்ல பெட்ரோல் தீந்துடுச்சு.. கொஞ்சம் பங்க் வரை தள்ளிட்டு வரமுடியுமா..?
மொக்கை, வடிவேலு போல மனசுக்குள்ள, " ஹூக்கும்... எப்புடிதான் கண்டுபுடிக்கிறாளுகளோ...!"ன்னு நெனச்சுகிட்டாலும், வெளியில காட்டிக்காம "ஷ்யூர்.. வொய் நாட்..?"ன்னு சொல்லி தள்ள ஆரம்பிச்சார். த்ரிஷா ட்ரைவிங் சீட்ல உக்காந்துகிட்டு வண்டியை ஸ்டீயர் பண்ணுச்சு.
வண்டி தள்ளி... தள்ளி... மொக்கைக்கு நாக்கு தள்ள ஆரம்பிச்சுடுச்சு. ரொம்ப தூரம் தள்ளிட்டு வந்த மொக்கை, கொஞ்சம் பக்கவாட்டுல திரும்பிப் பார்த்தார்.. ஒரு பெட்ரோல் பங்கை தாண்டி வண்டி போய்கிட்டு இருக்கறதைப் பார்த்து கடுப்பாயிட்டார்.. உடனே தள்ளறதை நிறுத்திட்டு, முன்னால ஓடிப்போய்...
"ஏம்மா.. உனக்கே இது நல்லா இருக்கா..? அதோ ஒரு பங்க் இருக்குல்ல.. அங்க போகாம நீ பாட்டுக்கு போய்கிட்டு இருக்கியே.. என்று குமுறினார்..
"திரிஷா" சொன்னாள்.. " அந்த பங்க்ல எக்ஸ்ட்ரா ப்ரீமியம் பெட்ரோல் இருக்காது டார்லிங்.. சாதா பெட்ரோல் என் மாருதிக்கு ஒத்துக்காது.. அடுத்த தெருவில் ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு.. ப்ளீஸ்.. என் கண்ணுல்ல...கொஞ்சம் தள்ளிட்டு வாங்களேன் !"
No comments:
Post a Comment