*நங்கள் ஏழு பேரு ஓர் குடையின் கீழ் நடந்தோம்.
ஆனா ஒருத்தர் கூட நனையவில்லை எப்படி??
*மழையே பெய்யவில்லை
*டாக்டர் கதை எழுதினால் எப்படி எழுதுவார்??
*சாப்பாட்டுக்கு முன்பு,சாப்பாட்டுக்கு பின்பு
*பல் ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்??
*சொத்தையோட போகணும்
*குரைக்கிற நாய் கடிக்காது ஏன் தெரியுமா??
*ரெண்டு வேலையையும் ஒரே நேரத்துல அதால ரெண்டு வேலையும் செய்ய முடியாது
*நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடித்து விட்டார்களாம் ஏன்??
*யாரோ இங்க தமிழ் வாத்தியார் யாருன்னு கேட்டதுக்கு அடியேன் அடியேன் தான்னு சொல்லி இருக்காராம்
அப்பா: எக்ஸாம் ஹால்ல தூங்கிட்டு வரியே வெக்கமா இல்லை??
மகன்: நீங்கதானே சொன்னீங்க கேள்விகளுக்கு விடை தெரியலேன்னா முழிச்சிகிட்டு இருக்காதேடனு அதான் தூங்கினேன்
உங்க பையன் கோவிலுக்கு போனால் அதிகமா பொய் சொல்றானே ஏன்?
அவன் கோவில்ல மெய் மறந்துடுவான்
No comments:
Post a Comment