16 June 2008

அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன்.அது முதுகுல எச்சு துப்பினேன் சுப்பு:ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக தடவினேன் ஈரமா இருந்தது . அது நீ செஞ்சதுதானா??

டாக்டர்:நாய் கடிச்சால் தொப்புள சுத்தி பதினான்கு ஊசி போடணும்
நோயாளி: முடியாது டாக்டர்
டாக்டர்" ஏன்??
நோயாளி: நாய் ஓடி போய்டுச்சு டாக்டர்

லெட்டர் ல நிற்க நிற்கனு எழுதாதீங்க.
ஏன்?? பாவம் படிக்கிறவங்களுக்கு கால் வலிக்க போகுது

ஆசிரியர்: பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனை சுத்துமா??இல்லை சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியை சுத்துமா??
மாணவன்: எனக்கு தலை சுத்துது சார்

வக்கீல் : கொலை எங்கே நடந்தது??
சாட்சி: திருப்பதியில
வக்கீல்:இப்படி மொட்டையா சொன்னா எப்படி??

பெரியசாமி: எங்க தலைவர் திறந்த புத்தகம் மாதிரி
சின்னசாமி: அதான் நேத்து ரோட்ல போட்டு ஆளாளுக்கு புரட்டிக்கிட்டு இருந்தாங்களோ??

எல்லா மொழிகளையும் பேச கூயது எது??
எதிரொலி

பக்கத்து தியேட்டர்ல ஆட்டுகார அலமேலு படத்தை ஏன் எடுத்துட்டாங்க??
நம்ம தியேட்டர் ல பாயும் புலி ஒடுதுல்ல அதான்

No comments: