16 June 2008

கம்ப்யூட்டர் படிச்சாதான் இனிமேல் வேலை கிடைக்கும்
அப்ப நீ படிச்சா வேலை கிடைக்காத??

ஆசிரியர்: எங்கே ஆங்கில எழுத்துக்களை வரிசையா சொல்லு
மாணவன்: பி, சி, டி,எப்
ஆசிரியர்: டே! ஏன்டா முதல் எழுது ஏ விட்ட??
மாணவன்: அது வயது வந்தவங்களுக்கு மட்டும் சார்

பதில் எழுதும் முறை
ஒருவன் எழுதிய கடிதத்தின் கடைசி வரி,இந்த கடிதம் உனக்கு கிடைக்காவிட்டால் உடனே எனக்கு கடிதம் எழுது

பாத்திரம்
ஏங்க அண்டா குண்டா எல்லாம் விக்குறீங்க?? என்னோட பையன் பட்டணத்தில சின்ன பாத்திரத்துல நடிக்கிறானாம் .செலவுக்கு பணம் அனுப்ப சொன்னான்

படத்தின் முடிவில் தற்கொலை செய்துகொள்கிறார்
யார் வில்லனா?? கதாநாயகனா??
தயாரிப்பாளர்

வீட்டுக்கு போன மறந்தாபுல தூங்கிடுறேன் டாக்டர்....
நல்லதுதானே
திருட போன வீட்டுல தூங்கின மாட்டிக்க மாட்டேனா டாக்டர்

நீங்க சென்னை வாசிதானே??
எப்படி கண்டுபுடிசீங்க??
பைப்ல தண்ணி வரத கடவுள பாக்குற மாதிரி பாக்குறீங்க

ஆசிரியர்:ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு??
மாணவன்: ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார்

ஆசிரியர்:உண்மைக்கு எதிர்பதம் என்னனு உங்க பையன் கிட்ட கேட்டா தெரியலை சொல்லுறன்
அம்மா: ஆமாம் சார் அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார்

No comments: