ஒரு காட்டில் வறுமை தாண்டவம் ஆடியது.. ஆமாங்க.. காட்டில்தான்.. அங்க பிரச்னை என்னன்னா சிங்கம் புலி, சிறுத்தை இதுகல்லாம் நிறைய இருந்துச்சுங்க. அதுக அடிச்சுத் தின்னதான் சின்ன மிருகம் எதுவுமே இல்லே..
இப்படி இருக்கையில், ஒருநாள் ஒரு சிறுத்தை வாயெல்லாம் ரத்தம் ஒழுக வந்துச்சு. மற்ற மிருகமெல்லாம் சுத்தி வளைச்சு கொக்கி போட்டுச்சு.
"மவனே.. நீ மட்டும் எங்க போய் முழுங்கிட்டு வரே..? ஒழுங்கா சொல்லிடு..!"
ஹீரோ சிறுத்தை , "போங்கப்பா ... எனக்கு தூக்கம் வருது.. காலையில் பார்த்துக்கலாம்"ன்னு சொல்லிட்டு தன்னோட குகைக்குள்ள போய் தூங்கிடுச்சு.
"பய நல்லா தின்னுட்டு வந்து களைப்பா தூங்கிட்டான்.. "
புலம்பிகிட்டே மத்த மிருகம் எல்லாம் குகை வாசலிலேயே தேவுடு காத்தன. விடிந்தது. ஹீரோ வெளியே வந்துச்சு.
"இப்பவாவது சொல்லித்தொலையேண்டா சனியனே..!" சிங்கம் உறுமியது.
"'நேற்று கீழ் காட்டுக்கு போயிருந்தேனா..." ஹீரோ இழுத்தது.
"அந்தக் கதையெல்லாம் வேண்டாம்.. வா.. இடத்தைக் காட்டு.." புலி பரபரத்தது.
ஹீரோ எல்லோரையும் அழைச்சுட்டுப் போச்சு. சும்மா இல்ல .. 65 கிலோ மீட்டர் ஸ்பீடுல.. வடிவேலு போல ஸ்பீடைக் குறைக்காம போயிட்டுருக்கும்போது, ஹீரோ ஒரு மாந்தோப்பை காட்டுச்சு.
எந்த இடம்டா.. சீக்கிரம் சொல்லு.. சிங்கம் சிடுசிடுத்தது.
அதோ நடு மரம் இருக்குதே உங்களுக்கு தெரியுதா..?
வேகத்தைக் குறைக்காத விலங்குகள் சொல்லின.. "ம்ம்ம் தெரியுது.. தெரியுது.. எல்லா விலங்கும் கூட்டு பாடின.
ஒரு பெருமூச்சை வெளியிட்ட ஹீரோ சொன்னது..
"நேற்று நானும் இதே வேகத்தில் வந்தபோது பசி மயக்கத்தில் எனக்கு அந்த மரம் தெரியலேப்பா.. அதான் வாயெல்லாம் ரத்தம்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"
16 June 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment