30 December 2008

வருடத்தின் கடைசி பதிவு

மிஸ்டர். மொக்கை ஒரு விபத்தில் சிக்கினார்.

தன்மீது மோதி படுகாயப்படுத்திய போக்குவரத்து நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். அன்று நீதிமன்றத்தில் மொக்கையின் வழக்கு கேட்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. போக்குவரத்து நிறுவனம் ஒரு பிரபல வழக்குரைஞரை நியமித்திருந்தது. குறுக்கு விசாரணைக்காக, பாதிக்கப்பட்ட மொக்கையை போ.நி. வழக்கறிஞர் கூண்டிலேற்றி விசாரிக்கிறார்.. இதுதான் இன்றைய காட்சி.

வழக்கு : விபத்து நடந்த உடனே நிகழ்விடத்துக்கு வந்த காவலர்களிடம் "நான் நன்றாக இருக்கிறேன்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை.." என்று சொன்னீர்கள் அல்லவா..?

மொக்கை : அன்று என்ன நடந்தது என்று சொல்கிறேன்.. நானும் என் அன்புக்குரிய கழுதை பஞ்சகல்யாணியும்...

வழக்கு : (இடைமறித்து) எனக்கு அந்த விபரமெல்லாம் வேண்டாம்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னீர்களா இல்லையா..?

மொக்கை : நிகழ்வு நாளன்று நானும் என் கழுதை கல்யாணியும்..

வழக்கு : (குறுக்கிட்டு... நீதிபதியை நோக்கி..) கனம் கோர்ட்டார் அவர்களே.. விபத்து நடந்தவுடன் வந்த காவலர்களிடம் இவர் தனக்கு எதுவும் ஆகவில்லையென்று கூறியிருக்கிறார். இப்போது தீயநோக்கத்தோடு வழக்கு தொடர்ந்து உங்கள் நேரத்தை வீணடிக்கிறார். உடனே இவர் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்.

நீதிபதி : பொறுங்கள்.. எனக்கு அவர் கல்யாணிக் கதையைக் கேட்க ஆவலாக இருக்கிறது. மிஸ்டர்.மொக்கை.. நீங்கள் உங்கள் தரப்பு நியாயத்தைக் கூறுங்கள்..

மொக்கை : நன்றி நீதிபதி அவர்களே.. அன்று நானும் என் பாசத்துக்குரிய கழுதை பஞ்சகல்யாணியும் சாலை ஓரமாகச் சென்றுகொண்டிருந்தபோது, இந்த வாகனம் எங்களை மோதி தூக்கி எறிந்துவிட்டது. நாங்கள் சாலையில் பக்கத்துக்கொருவராக விழுந்தோம். எனக்கு கையிலும் காலிலும் எலும்பு முறிவு. மூன்று பற்கள் விழுந்துவிட்டன. மூக்கு நசுங்கி ரத்தம் பீறிட்டது. சாலையின் அந்தப்பக்கம் விழுந்து கிடந்த கல்யாணி, பாதி உடல் நைந்துபோய் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.

தற்செயலாக அங்கு வந்த காவல் அதிகாரி, முதலில் கழுதையைப் போய்ப்பார்த்தார். அதன் அவஸ்தையைக் காணச் சகியாமல், துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டார். அடுத்து என்னைப் பார்த்து,"உனக்கு என்ன ஆயிற்று..?" என்று கேட்டார்.. அந்தச் சூழ்நிலையில் நான் வேறு என்ன சொல்லியிருக்க முடியும் யுவர் ஆனர்..?"

08 December 2008

"நேத்து பார்த்தது ஸ்கிரீன் சேவரா..?"

மொக்கை மனித வள அலுவலர். இறந்தபின் சொர்க்கம் போனார். வாயிலில் தடுக்கப்பட்டார். உங்களுக்கு நரகத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

நரகத்துக்கு போய் ஒரு நாள் சோதனை ஓட்டமாக தங்கியிருப்பேன். பிடித்தால் தொடர்ந்து இருப்பேன். இல்லாவிட்டால் இங்கு வருவேன். இடம் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் நரகம் போனார் மொக்கை.

போய்ப் பார்த்தால், நரகமா, சொர்க்கமா என்று இருந்தது. அருவிகள், பூங்காக்கள், மான்கள், மயில்கள், இன்னிசை, ரம்பை, ஊர்வசி ஆட்டம் என்று ஜெகஜ்ஜோதியாக இருந்தது.

மகிழ்ந்த மொக்கை, திரும்ப சொர்க்க வாயிலோனிடம் வந்து, நரகத்திலேயே வசிப்பதாக எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.

மறுநாள்.. நரகம்..!

எங்கும் மரண ஓலம், சாம்பலும் புகையும் சூழ, கிங்கரர்கள், பாவிகளை கொத்து பரோட்டா போட்டுக்கொண்டிருக்க, மொக்கை பரிதாபமாகக் கேட்டார்..

"நேத்து பார்த்தது ஸ்கிரீன் சேவரா..?"

பதில் உடனே வந்தது,,,

இல்லை.. நேற்று உன்னை நாங்கள் ரெக்ரூட் செய்தோம்.. இன்று முதல் நீ எங்கள் பணியாள்..!

நன்றி அரசர் நகைச்சுவை

05 December 2008

நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் ......

மொக்கை : உண்மையைச் சொல்லு.. நிஜமாவே நீ என்னைத்தானே காதலிக்கிறே..?

காதலி : ஆமாம் மொக்கை.. நேத்திக்குதான் உன் வகுப்புல இருக்கற பயலுக்கெல்லாம் லவ் லட்டர் கொடுத்தேன் .. ஒரு நாதாரியும் பதில் அனுப்பல..!

ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்


ஒரு குளத்தில் நாலு யானைகள் நீச்சல் அடிச்சு கும்மாளம் போட்டுச்சுங்க. நம்ம சின்னா தண்ணிக்குள்ள டைவ் அடிச்சு முழுகிப் போய், யானைகளோட கால்களை எண்ணினான்..
மொத்தம் 12 தான் இருந்துச்சு.. எப்படி..?


ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்


கிரிக்கெட்டுல எந்த நாட்டு வீரர்களுக்கு "ஃபுட் வொர்க்" சூப்பரா இருக்கும்..?

இந்தியாதான்.. பேட்டிங் போறதும், அவுட் ஆகி, பெவிலியன் திரும்பறதும்ன்னு, சுறுசுறுப்பா இருப்பாங்கல்ல..!


ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்


நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா,
நண்பன் சொல்லுவான்,, " சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!

நல்ல நண்பன் சொல்லுவான்.. " நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு..!

(ஐயோ.. பூவு கண்ணுல இந்த ஜோக் மாட்டாம இருக்கணுமே..! )

ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்


அப்புறம் அந்த ஆனைக் கேள்விக்கு விடை..

ஒரு யானை மட்டும் பேக் ஸ்ட்ரோக் போட்டுகிட்டு இருந்துச்சு..!

ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

02 December 2008

துணுக்குகள்...

மொக்கையின் மாமியார் செத்துப் போயிட்டாங்க..! மொக்கை திடீர்ன்னு குமுறிக்குமுறி அழ ஆரம்பிச்சாரு.. மிஸஸ்.மொக்கை கடுப்பாயிருச்சு..

"சரிதான் நிறுத்துங்க.. எங்கம்மாவை உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. எதுக்கு இப்போ அவங்க செத்துக் கிடக்கறதைப் பார்த்து உருகி, உருகி ஓவர் ஆக்ட் பண்றீங்க..?"

"இல்லேப்பா.. என் அழுகைக்குக் காரணம் என்னன்னா.. உங்க அம்மா அசையறது போல இருக்கு.. பொழைச்சு எழுந்துடுவாங்களோன்னு பீதியா இருக்கு..!"

_______________________________________________________________


அந்த காலத்துல, ஞானிகளும், முனிவர்களும் பசி தூக்கம் பாராமல், பச்சைத்தண்ணி குடிக்காமல், குடும்பத்தக்கூட நெனைக்காம, சிரிப்பு கொண்டாட்டம் இல்லாம தவம் இருப்பாங்க..

இப்பவும் அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கத்தான் செய்யறாங்க.. அவங்க பேரு..

மென்பொருள் பொறியாளர்கள்..!

_______________________________________________________________


மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

_______________________________________________________________

ரொம்ப லவ் ஏன் ஃபெயிலியர் ஆகுது தெரியுமா..?

ஒரு ஆளு அதிகமான அளவுல காதலிச்சாலும்,
இன்னொரு பார்ட்டி, அதிகமான ஆளுகளைக் காதலிக்கிறதுனாலதான்..!

நன்றி அரசர் நகைச்சுவை

30 November 2008

துணுக்குகள்....

"வக்கீல் சார்... வர்ற இருபதாம் தேதி உங்க ராசியைச் சனி பிடிக்குது."

"ஒரு ஆறு மாசம் வாய்தா வாங்க முடியாதா ஜோசியரே?"

--------------------------------------------

இப்ப வரும் தர்மா மீட்டர்ல சிலது தப்பு தப்பா ஜுரம் காட்டுதாமே டாக்டர்?"

"ஆமாம். 'அதர்மா' மீட்டரா இருக்கு!"

---------------------------------------------

"என்ன மொக்கை... பாதி ராத்திரியில் வீடேறி வந்து எழுப்பி எதுக்காக கோணிப் பை இருக்கான்னு கேட்கறீங்க?"

"எங்க வீட்டுக்கு வந்திருக்கிற திருடன்தான் கேட்கச் சொன்னான். திருடின பொருளை மூட்டை கட்ட வேணுமாம்...."

----------------------------------------------

"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

-----------------------------------------------

"இருக்கற வீட்டை உயில்ல எழுதி வைக்கப் போறீங்களா! யார் பேருக்கு?"

"வீட்டு சொந்தக்காரன் பேருக்குத்தான். என் மறைவுக்குப் பிறகு அவனே இதை அனுபவிக்க வேண்டியதுன்னு உயில் எழுதிடப் போறேன்!"

------------------------------------------------

"ஆபரேஷன் ஆன பிறகுதான் மயக்கம் தருவீங்களா! ஏன் நர்சம்மா இப்பட சொல்றீங்கி?"

"மயக்கம் கொடுக்கிற டாக்டர் ரெண்டு மணி நேரம் லேட்டாகத்தான் வருவாராம். அதுக்குள்ளே ஆப்ரேஷன் பண்ற டாக்டர் அவசரப்படறார்.. வேற ஒரு ஆபரேஷனுக்கு போகணுமாம்..!

---------------------------------------------

"பேய்னா அது சாதாரணமா பாழடைஞ்ச பங்களாலதானே இருக்கும்? இந்தப் பேய் மட்டும் ஏன் பாழடைஞ்ச குடிசையில இருக்கு?"

"இது ஏழைப் பேயாம்!"

---------------------------------------------

28 November 2008

இது வேலைக்கு ஆகாது...!

மூன்று ஜோடிகள் சொர்க்கத்தின் வாயிற்கதவைத் தட்டினர்.. வாயிற்காவலன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்..

முதல் ஜோடியில் ஆண் : நாங்கள் உள்ளே போகலாமா..?

வாயிற்காவலன் : கூடாது.. நீ வாழ்நாள் முழுதும் மண்ணாசை பிடித்துத் திரிந்தாய்.. மேலும் நீ மருதன் என்று நிலத்தின் பெயரையே கொண்டிருக்கிறாய்.. திரும்பிப் போ..!

2வது இணையில் ஆண் : நாங்களாவது........?

வாயிற்காவலன் : இயலாது.. முதல் ஜோடியாவது பரவாயில்லை.. நீ பொன்னாசை வெறி பிடித்து அலைந்தவன்.. மேலும் உன் பெயர் முத்தன். போ... போ..!

இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மூன்றாவது ஜோடி பெண் தன் ஆண் இணையைப் பார்த்து சொன்னாள்..

"சுக'ந்தா..! இது வேலைக்கு ஆகாது.. வா.. போவோம்..!"

நன்றி அரசர் நகைச்சுவை

25 November 2008

மிஸ்டர்.மொக்கை..!

மிஸ்டர்.மொக்கை மோட்டார் சைக்கிளில் மனைவியோடு சாலையில் போனார். கொஞ்சதூரம் போனபின், ஒரு போலீஸ் கார் அவரைத் துரத்தி வந்து வழிமறித்தது.. அதிர்ச்சியடைந்த மொக்கை என்னவென்று விசாரிக்க, அதிகாரி சொன்னார்..

"என்னா மேன்.. உன் மிசஸ் 5 கிலோ மீட்டருக்கு அப்பால் பைக்லேருந்து கீழே விழுந்துட்டாங்க. அதுகூட தெரியாம வந்துகிட்டு இருக்கே..!

மொக்கை பதிலளித்தார்..

கடவுளுக்கு நன்றி.. என் காதுதான் செவிடாயிடுச்சோ என்னமோன்னு பயந்துட்டேன்.. அவ தொணதொணப்பு என் காதில் கொஞ்ச நேரமா கேட்கலியேன்னு..!
______________________________________________________________

மொக்கையின் நண்பர் : அந்தக் கட்சிப் பத்திரிகையில் வேலை செய்துகிட்டு இருந்தியே.. இப்போ திடீர்ன்னு நிறுத்திட்டாங்களாமே.. என்ன ஆச்சு..?

மொக்கை : 'தலைவர் பதிலளிக்கிறார்'ன்னு அச்சுக் கோக்கறதுக்கு பதிலா, 'தலைவர் பல்லிளிக்கிறார்'ன்னு கோத்து தொலச்சிட்டேன்..!

22 November 2008

மனித இனம் எப்படி தோன்றிற்று..?

மிஸ்டர்.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்..

"கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"

குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர்.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்..

"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"

மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்..

"என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!

நன்றி அரசர் நகைச்சுவை

20 November 2008

பெரிசா தைச்சுடாதீங்க....

எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..

தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?

இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

xxxxxxxxxxxxxxxx

நீங்க சமயத்துல செஞ்ச உதவிக்கு என் தோலை செருப்பா தைச்சுப் போடணும் சார்....

வெரிகுட்! என் செருப்பு அளவு எட்டு. மறந்து பெரிசா தைச்சுடாதீங்க....

xxxxxxxxxxxxxxxxx

மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

18 November 2008

வாயில்லா ஜீவன்..!

திருமதி.மொக்கையும், ஜூனியர் மொக்கையும் ஒரு ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்துக்குச் சென்றிருந்தனர். திருமதி.மொக்ஸ் மிகவும் விலை உயர்ந்த, அபூர்வ விலங்கினத்தின் தோலால் செய்யப்பட்ட மேலாடை ஒன்றைத் தேர்வு செய்தாள். இதைப் பார்த்த ஜூனியர் மொக்கை சொன்னான்..

அம்மா.. உனக்குத் தெரியுமா..? இந்த மேலாடைகளை வாங்குவதன் மூலம் உன்னை அறியாமலே ஒரு பரிதாபத்துக்குரிய, வாயில்லா ஜீவனுக்கு தீங்கு இழைக்கிறாய்..!

திருமதி. மொக்கை சொன்னாள்..

கவலைப்படாதே குட்டி மொக்கை.. இதற்கான பணத்தை உன் தந்தை உடனடியாக செலுத்தவேண்டியதில்லை. சுலபத்தவணைகளில் மெதுவாக செலுத்தலாம்..!

நன்றி அரசர் நகைச்சுவை

15 November 2008

'நம்ம தலைவரு.......

நமது நாற்பது தொகுதி வேட்பாளர்கள் பட்டியலைப் பார்த்து மக்கள் என்ன பேசிக்கிறாங்க?''

''அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஞாபகத்துக்கு வர்றதா சொல்றாங்க தலைவரே!''
________________________________________________________________

''நம்ம தலைவரு இதுக்கு முன்னாடி இந்தத் தொகுதியில பல பேரை டெபாசிட் இழக்க வெச்சிருக்காரு..!''

''அவ்வளவு செல்வாக்கு உள்ள தலைவரா...?''

''இல்லய்யா... ·பைனான்ஸ் கம்பெனி வெச்சிருந்தவரு!''
________________________________________________________________

''நாட்டில் இருக்குற விலைவாசி உயர்வு தலைவரை ரொம்பப் பாதிச்சுடுச்சாம்...''

''அவருக்கு அவ்ளோ இரக்க குணமா?''

''ஒரு வோட்டுக்கு ஐந்து, பத்து கொடுத்த காலம் போய்... இப்ப நூறு ஐந்நூறு கொடுக்க வேண்டியதா இருக்கேன்னு வருத்தப்படுறார்!''
________________________________________________________________

''தலைவரே... செல்போன்ல ஏன் வைப்ரேஷன் வெச்சுத் தொலைச்சீங்க... பாருங்க. நீங்க உதர்றதைப் பார்த்து தோல்வி பயத்துல உதர்றதா எதிர்க்கட்சிகள் சொல்றாங்க!''
________________________________________________________________

13 November 2008

காபியை மறந்துட்டுப் போறீங்களே..!

மிஸ்டர்.மொக்கை தாயகம் திரும்பிக்கொண்டிருந்தார். அது ஒரு இடைநில்லா வானூர்தி.சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. விமானிகள் அறையிலிருக்கும் ஒலிவாங்கி இயங்கிக் கொண்டிருப்பது தெரியாமல், ஒரு விமானி மற்றவரிடம் சொன்னார்..

ரொம்ப களைப்பா இருக்குப்பா..! இந்த மீட்டர்களையும், மானிட்டர்களையும் பார்த்து பார்த்து அலுத்துப் போயிடுச்சுப்பா.. ஒரு ஸ்ட்ராங் காப்பியும், ஒரு அழகான பொண்ணும் இப்போ இருந்தா.. அவள் மடியில் படுத்துகிட்டு காபியை அனுபவிச்சு குடிப்பேன்..!

இந்த உரையாடல் பயணிகள் பகுதியில் தெளிவாக ஒலிபரப்பு ஆவதைக் கவனித்த ஒரு விமானப் பணிப்பெண் விமானிகளை எச்சரிப்பதற்காக அவசரமாக விமானிகள் அறையை நோக்கி ஓடினாள்..

இதைக் கவனித்த மொக்கை சொன்னார்..

"மிஸ்.. காபியை மறந்துட்டுப் போறீங்களே.. அதையும் எடுத்துட்டு போங்க..!"

நன்றி அரசர் நகைச்சுவை

10 November 2008

துணுக்குகள்

100 வயதுவரை வாழ்வது எப்படிங்கற புத்தகத்தை கொடுத்தவரை உன் தாத்தா திட்ட‌றாரே ஏன்?

அவருக்கு வயது 102.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என்ன எலுமிச்சம்பழம் இவ்ளுண்டுதான் இருக்கு?

இது எலுமிச்சம்பழம் இல்லங்க சாத்துக்குடி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஜட்ஜ் : சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?

திருடன் : ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?

அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில்
நடக்கும் வியாதியாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த கார் வாங்கினதில இருந்து ரிப்பேருக்காக
ஒரு ரூபாய் கூட கொடுக்கல தெரியுமா...!

அப்படித்தான் மெக்கானிக்கும் சொன்னான்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

செவிட்டு மெஷின்......

மிஸ்டர்.மொக்கைக்கு மனைவியிடம் அறை வாங்கியதில் காது செவிடாகிவிட்டது. செவிட்டு மெஷின் வாங்கக் கடைக்குப் போனார்.. கடைக்காரர் பல மாடல்களை எடுத்துக்காட்டினார்..

இதைப் போட்டுப் பாருங்க சார்.. காதுக்குள்ளேயே வச்சுக்கலாம்.. வெளில தெரியாது.. விலை 5000 ரூபாய்..

ரொம்ப விலை அதிகமாருக்கே..

இதைப் பாருங்க.. காது மடலுக்கு வெளில வச்சுக்கலாம்.. ரொம்பத் தெளிவா கேட்கும்.. விலை 3000 ரூபாய்..

200 ரூபாய்ல ஒண்ணும் இல்லையா..?

மொக்கையை ஒரு தடவை முறைத்துப் பார்த்த கடைக்காரர் சோப்புப் பெட்டி போன்ற ஒன்றையும் ஒரு ஒயரையும் எடுத்துக் கொடுத்தார்..

இது நல்லா கேட்குமா..?

கேட்காது.. இது பழய மாடல்.. ரிப்பேர் வேற..

அப்புறம் எப்படி எனக்கு காதில் விழும்..?

இது உன்கிட்ட இருக்கறதைப் பார்த்தாலே, அவனவன் கத்திப் பேசுவான்.. நீ காதில் வாங்கிக்கலாம்..!


நன்றி அரசு

09 November 2008

விமானிகள் இல்லா விமானம்..

உலகின் முதல் கணிணி மூலம் கட்டுப்படுத்தப்பட்டு இயங்கும் பயணிகள் விமானம் தன் வெள்ளோட்டத்தைத் துவக்க இருந்தது. விமானிகளோ, பணியாளர்களோ எவரும் இலர். தானியங்கிப் படிகள் மூலம் விமானத்துக்குள் நுழைந்த 200 பயணிகள் தங்கள் பயணச்சீட்டில் குறிக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். படிகள் விலகி, கதவுகள் தாமாகவே தாழிட்டுக் கொண்டன.

விமானம் ஓடுபாதையில் பயணத்தைத் துவக்கி, விண்ணில் எழும்பியபோது, விமானத்துக்குள் பதிவு செய்யப்பட்ட கணிணிக்குரல் பயணிகளை வரவேற்றது..

வணக்கம் சீமான்களே.. சீமாட்டிகளே.. !

1800 கோடி டாலர் அற்புதமான தானியங்கி விமானத்தின் முதல் சோதனை ஓட்டத்தில் பங்கேற்றிருக்கும் அதிர்ஷ்டசாலிகள் நீங்கள். உங்கள் பெயர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட இருக்கிறது.

இவ்விமானத்தின் அனைத்து இயக்கங்களும் கணிணி மூலம் துல்லியமாக இயக்கப்படுகின்றன. எல்லாமே சிறப்பாகவும் சரியாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன. எதுவுமே தவறிப் போக வாய்ப்பே இல்லை.. க்ரீச்..கடக்.. தவறிப் போக வாய்ப்பே இல்லை.. க்ரீச்.. கடக்.. தவறிப் போக வாய்ப்பே.. க்ரீச்..க்ரீச்.. க்ரீச்.. கடக்... வாய்ப்பே...க்ரீச்.. க்ரீச்..!

25 September 2008

நிகழ்ச்சி ஆரம்பம்..!

மிஸ்டர்.மொக்கை வெட்டியாக ஊர் சுற்றுபவர். ஒருநாள் எங்கெங்கோ சுற்றிவிட்டு மாலையில் களைப்பாக வீடு திரும்பினார்.வந்த*தும் வராததுமாக, தொலைக்காட்சி ரிமோட்டை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, மனைவியை அதிகாரமாக அழைத்து,

"நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்குள் நல்ல காஃபி போட்டு எடுத்து வா..!"

என்று ஆணையிட்டார். திருமதி.மொக்கை தன் கணவரின் மீது கொலைவெறியில் இருந்தாலும், பேசாமல் போய் காபி போட்டுவந்து கொடுத்தார். காபியை கையில் கூட வாங்காத மொக்கை,

"காபின்னா.. வெறும் காபிதான் தருவியா..? ஓடு.. நிகழ்ச்சியைத் துவங்குவதற்கு முன் கொறிக்க ஏதாவது எடுத்து வா.."

என்று விரட்டினார். இம்முறையும் கணவரை மன்னித்துவிட்ட மனைவி, மறு பேச்சு பேசாமல் போய் மிக்சர் எடுத்து வந்தார்.

மிக்சரை கொஞ்சம் வாயில் போட்ட மொக்கை,

"சரி.. சரி.. மரம் போல நிற்காதே.. நிகழ்ச்சி ஆரம்பம் ஆகுமுன் மின்விசிறியை சுழல விடு.. அந்த டீபாயை நான் கால் வைத்துக்கொள்ள ஏதுவாக என் அருகே இழுத்துப்போடு. ம்ம்ம்ம் சீக்கிரம்..!"

என்று ஆணையிட்டார்.. பொறுமை எல்லை மீறிய திருமதி,
ஆவி பறக்கும் காபியை, மொக்கை தலையில் எடுத்து கொட்டினார்.கூடவே..

"என்னாய்யா அதிகாரம் தூள் பறக்குது..? வெட்டிச் சோறு தின்னும்போதே இவ்வளவு சவடாலா..? என்னிக்காவது உருப்படியா ஒரு காரியம் செய்திருக்கியா..? அப்படி என்ன நிகழ்ச்சி கொள்ளை போகப்போகுது..? ஒரேயடியா ஆடறே.. ஒடம்பு எப்படி இருக்கு..?

என்று குதறினாள். தலையில் ஊற்றப்பட்ட காபியை வழித்து விட்ட மொக்கை..முணுமுணுத்தார்..

"நிகழ்ச்சி ஆரம்பிச்சுருச்சு..!"

சில சிரிப்'பூ'க்கள்...

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

ooooooooooooooooooo

'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''

''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்''

''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.''

ooooooooooooooooooo

நண்பன்: ஏண்டா, உன் தாத்தா ரொம்ப நாளா கோமாவிலே இருந்துட்டு இப்போ எழுந்துட்டாராமே. முதல்லே என்ன கேட்டாரு?

மற்றவன்: நம்ப தியாகராஜ பாகவதர் படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு கேட்டாரு!

oooooooooooooooooooo

ஏம்பா, நான்தான் இந்த பத்திரிகைக்கு ஆயுள் சந்தா கட்டி இருக்கேனே, இப்போ திடீர்னு வருட சந்தா கேட்டா எப்படி?

பின்ன என்ன? நீங்க எழுபது வருடத்துக்கு முன்னாடியே ஆயுள் சந்தா கட்டி இருக்கீங்க! இவ்வளவு வருடம் உயிரோடு இருப்பீங்கன்னு நாங்க கண்டோமா!! சரி பணத்தை எடுங்க?''

ooooooooooooooooooo

நேரம் கிடைச்சா கீழே உள்ள வலைப்பூக்களுக்கு போய்ப் பாருங்க.. தவறாம உங்க கருத்துகளையும் பதிவு செய்யுங்க.

நன்றி நண்பர்களே..!

சின்னா + மொக்கை = டபுள் தமாக்கா..!

சின்னா ஒரு நாய்க்குட்டியை ஆசையாக வளர்த்து வந்தான். அதனுடன் பேசுவதும், விளையாடுவதுமாக*, ஹட்ச் நாய் + பையன் போல இருவரும் இணைபிரியாமல் இருந்து வந்தார்கள். சின்னாவுக்கு தன் நாய்க்குட்டிதான் உலகமாக இருந்தது.

இப்படி இருக்கையில் ஒருநாள் சின்னா பள்ளி சென்றிருக்கும் வேளையில் நாய்க்குட்டி காரில் அடிபட்டு பரலோகம் போய்விட்டது. அம்மா இதை எப்படி சின்னா எடுத்துக்கொள்வானோ என்று கவலைப்பட்டாள். மாலை சின்னா வந்தவுடன், நாய்க்குட்டியைத் தேடினான். அம்மா மெல்ல நடந்ததைச் சொல்லி,

" கவலைப்படாதே..சின்னா..! உன் நாய் எங்கும் போய்விடவில்லை.. இன்னேரம் கடவுளின் மடியில் இருக்கும்..!

சின்னா மெல்ல வினவினான்..

செத்துப்போன நாயை மடியில் வச்சுகிட்டு கடவுள் என்னம்மா பண்ணுவாரு..?
________________________________________________

நாய் கதையை சொன்னதும்தான் நினைவுக்கு வருகிறது. ஒருநாள் நம்ம மொக்கையை நாய் கடித்து விட்டது. வெறிநாய் ஆகையால், மொக்கையின் நிலைமை படு சீரியஸ் ஆகிவிட்டது. டாக்டரும் நாள் குறித்துவிட்டார்.

மொக்கையின் நண்பர் ஒருவர், கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்று போனார். அப்போது மொக்கை தீவிரமாக ஏதோ எழுதிக்கொண்டிருப்பதிப் பார்த்து கேட்டார்..

" ஹேய்.. மொக்கை.. டோன்ட் பி பேனிக்யா.. உயில் எழுத இப்போ என்ன அவசியம்..? "

மொக்கை சொன்னார்..

" எவன் சொன்னான்.. நான் உயில் எழுதறேன்னு..? நான் யார் யாரைக் கடிக்கணும்ன்னு லிஸ்டுல்ல தயார் பண்ணிகிட்டுருக்கேன்..!.. கொஞ்சம் இரு.. இதோ வந்துடுறேன்..!"

10 July 2008

திருவாளர் மொக்கையன்..

மிஸ்டர் மொக்ஸ் உடம்பைக் குறைக்க உதவும் உணவு ஒன்றை வாங்கி வந்தார்.. அதில் போட்டிருக்கும் முறைப்படி வெந்தது பாதி..வேகாதது பாதியாக சமைத்து சாப்பிட்டார். அதன் கேவலமான ருசியைப் பொறுத்துக்கொண்டு சிரமப்பட்டு 1 மாதம் சாப்பிட்டு எடை பார்க்க 5 கிலோ கூடியிருந்தது. கோபமாக கடைக்காரனிடம் பாய்ந்தார்..

தினம் வந்து ஒரு பாக்கெட் வாங்கிட்டுப் போறேனே.. ஒருநாளாவது சொல்லியிருக்கியா.. இது உடம்பு உப்புற உணவுன்னு..?

இல்லையே.. இது இளைக்க வைக்கிற உணவுதானே..?

பின்ன ஏன் எனக்கு மட்டும் உப்புது..?

கடைக்காரன், மொக்ஸ் சமைக்கும் முறை, சாப்பிடும் முறை எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பாக்கெட்டின் மேல் இருந்த அறிவிப்பைச் சுட்டிக் காட்டினான்..அதில்....

" 6 பேருக்கு தேவையான உணவு.."

என்று இருந்தது..!
__________________________________________

மிஸ்டர் மொக்கை ஒரூமுறை பெட்ரோல் செலவைக் குறைக்க சைக்கிள் ஒன்றைப் புதிதாக வாங்கினார்..ஆனால் தொடர்ந்து காரிலேயே அலுவலகம் வந்தார்.. நண்பன் கேட்டான்..

என்ன மொக்ஸ்..? சைக்கிள் வாங்கினே போல.. ஆனா கார்லேயே சுத்திகிட்டு இருக்கே..?

அதை ஏன் கேட்கிறே.. அந்த சைக்கிள்ல ஏதோ கோளாறு இருக்கு..சீட்டுல ஏறி உக்காந்ததுமே பொத்'துன்னு கீழே விழுந்துடுது.. கார் மாதிரி ஸ்டெடியா நிக்க மாட்டுது..!
_________________

செவ்வி = பேட்டி

சீன நாட்டின் தலைவர் ஒருவர் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர்களுக்கு செவ்வி அளித்தார்..
செய்தியாளர் 1 : தோழரே.. உங்கள் விமானப்பயணம் எப்படியிருந்தது..?
சீனத் தலைவர் : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ... கொய்ங்ங்ங்ங்.. ஊஊஊஊஉ.. டட்ட்ட்ட்.. மிகுந்த இனிமையாக இருந்தது நண்பரே.. நன்றி..!
செய்தியாளர் 2 : இந்திய* சீன உறவு குறித்து என்ன சொல்ல விழைகிறீர்கள்..?சீனத் தலைவர் : கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஊய்ய்ய்ய்ய்ய்ய்... டட்ட்ட்ட்ட்ட்ட்ட்.. இது இன்று நேற்றல்ல.. எமது யுவான் சுவாங் காலத்திலிருந்தே தழைத்து வரும் சீரிய உறவு.. மிக்க மகிழ்ச்சி..!
சீனத்தலைவர் முதலில் வினோதமான ஒலிகள் கிளப்புவதும், பின்னர் அழகிய தமிழில் பதிலளிப்பதும் கண்டு வியந்த ஒரு செய்தியாளர் கேட்டார்.." தோழரே.. இவ்வளவு அழகான தமிழை எங்கு கற்றுக்கொண்டீர்கள்..?"
சீனத் தலைவர் : சொய்ய்ய்ய்ங்.. ஹூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... டட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் .. எங்கள் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் "நவ சீனா தெற்காசிய தமிழ் வானொலி" மூலமாகத்தான்..!