30 December 2008

வருடத்தின் கடைசி பதிவு

மிஸ்டர். மொக்கை ஒரு விபத்தில் சிக்கினார்.

தன்மீது மோதி படுகாயப்படுத்திய போக்குவரத்து நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். அன்று நீதிமன்றத்தில் மொக்கையின் வழக்கு கேட்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. போக்குவரத்து நிறுவனம் ஒரு பிரபல வழக்குரைஞரை நியமித்திருந்தது. குறுக்கு விசாரணைக்காக, பாதிக்கப்பட்ட மொக்கையை போ.நி. வழக்கறிஞர் கூண்டிலேற்றி விசாரிக்கிறார்.. இதுதான் இன்றைய காட்சி.

வழக்கு : விபத்து நடந்த உடனே நிகழ்விடத்துக்கு வந்த காவலர்களிடம் "நான் நன்றாக இருக்கிறேன்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை.." என்று சொன்னீர்கள் அல்லவா..?

மொக்கை : அன்று என்ன நடந்தது என்று சொல்கிறேன்.. நானும் என் அன்புக்குரிய கழுதை பஞ்சகல்யாணியும்...

வழக்கு : (இடைமறித்து) எனக்கு அந்த விபரமெல்லாம் வேண்டாம்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னீர்களா இல்லையா..?

மொக்கை : நிகழ்வு நாளன்று நானும் என் கழுதை கல்யாணியும்..

வழக்கு : (குறுக்கிட்டு... நீதிபதியை நோக்கி..) கனம் கோர்ட்டார் அவர்களே.. விபத்து நடந்தவுடன் வந்த காவலர்களிடம் இவர் தனக்கு எதுவும் ஆகவில்லையென்று கூறியிருக்கிறார். இப்போது தீயநோக்கத்தோடு வழக்கு தொடர்ந்து உங்கள் நேரத்தை வீணடிக்கிறார். உடனே இவர் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்.

நீதிபதி : பொறுங்கள்.. எனக்கு அவர் கல்யாணிக் கதையைக் கேட்க ஆவலாக இருக்கிறது. மிஸ்டர்.மொக்கை.. நீங்கள் உங்கள் தரப்பு நியாயத்தைக் கூறுங்கள்..

மொக்கை : நன்றி நீதிபதி அவர்களே.. அன்று நானும் என் பாசத்துக்குரிய கழுதை பஞ்சகல்யாணியும் சாலை ஓரமாகச் சென்றுகொண்டிருந்தபோது, இந்த வாகனம் எங்களை மோதி தூக்கி எறிந்துவிட்டது. நாங்கள் சாலையில் பக்கத்துக்கொருவராக விழுந்தோம். எனக்கு கையிலும் காலிலும் எலும்பு முறிவு. மூன்று பற்கள் விழுந்துவிட்டன. மூக்கு நசுங்கி ரத்தம் பீறிட்டது. சாலையின் அந்தப்பக்கம் விழுந்து கிடந்த கல்யாணி, பாதி உடல் நைந்துபோய் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.

தற்செயலாக அங்கு வந்த காவல் அதிகாரி, முதலில் கழுதையைப் போய்ப்பார்த்தார். அதன் அவஸ்தையைக் காணச் சகியாமல், துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டார். அடுத்து என்னைப் பார்த்து,"உனக்கு என்ன ஆயிற்று..?" என்று கேட்டார்.. அந்தச் சூழ்நிலையில் நான் வேறு என்ன சொல்லியிருக்க முடியும் யுவர் ஆனர்..?"

08 December 2008

"நேத்து பார்த்தது ஸ்கிரீன் சேவரா..?"

மொக்கை மனித வள அலுவலர். இறந்தபின் சொர்க்கம் போனார். வாயிலில் தடுக்கப்பட்டார். உங்களுக்கு நரகத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

நரகத்துக்கு போய் ஒரு நாள் சோதனை ஓட்டமாக தங்கியிருப்பேன். பிடித்தால் தொடர்ந்து இருப்பேன். இல்லாவிட்டால் இங்கு வருவேன். இடம் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் நரகம் போனார் மொக்கை.

போய்ப் பார்த்தால், நரகமா, சொர்க்கமா என்று இருந்தது. அருவிகள், பூங்காக்கள், மான்கள், மயில்கள், இன்னிசை, ரம்பை, ஊர்வசி ஆட்டம் என்று ஜெகஜ்ஜோதியாக இருந்தது.

மகிழ்ந்த மொக்கை, திரும்ப சொர்க்க வாயிலோனிடம் வந்து, நரகத்திலேயே வசிப்பதாக எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.

மறுநாள்.. நரகம்..!

எங்கும் மரண ஓலம், சாம்பலும் புகையும் சூழ, கிங்கரர்கள், பாவிகளை கொத்து பரோட்டா போட்டுக்கொண்டிருக்க, மொக்கை பரிதாபமாகக் கேட்டார்..

"நேத்து பார்த்தது ஸ்கிரீன் சேவரா..?"

பதில் உடனே வந்தது,,,

இல்லை.. நேற்று உன்னை நாங்கள் ரெக்ரூட் செய்தோம்.. இன்று முதல் நீ எங்கள் பணியாள்..!

நன்றி அரசர் நகைச்சுவை

05 December 2008

நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் ......

மொக்கை : உண்மையைச் சொல்லு.. நிஜமாவே நீ என்னைத்தானே காதலிக்கிறே..?

காதலி : ஆமாம் மொக்கை.. நேத்திக்குதான் உன் வகுப்புல இருக்கற பயலுக்கெல்லாம் லவ் லட்டர் கொடுத்தேன் .. ஒரு நாதாரியும் பதில் அனுப்பல..!

ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்


ஒரு குளத்தில் நாலு யானைகள் நீச்சல் அடிச்சு கும்மாளம் போட்டுச்சுங்க. நம்ம சின்னா தண்ணிக்குள்ள டைவ் அடிச்சு முழுகிப் போய், யானைகளோட கால்களை எண்ணினான்..
மொத்தம் 12 தான் இருந்துச்சு.. எப்படி..?


ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்


கிரிக்கெட்டுல எந்த நாட்டு வீரர்களுக்கு "ஃபுட் வொர்க்" சூப்பரா இருக்கும்..?

இந்தியாதான்.. பேட்டிங் போறதும், அவுட் ஆகி, பெவிலியன் திரும்பறதும்ன்னு, சுறுசுறுப்பா இருப்பாங்கல்ல..!


ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்


நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா,
நண்பன் சொல்லுவான்,, " சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!

நல்ல நண்பன் சொல்லுவான்.. " நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு..!

(ஐயோ.. பூவு கண்ணுல இந்த ஜோக் மாட்டாம இருக்கணுமே..! )

ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்


அப்புறம் அந்த ஆனைக் கேள்விக்கு விடை..

ஒரு யானை மட்டும் பேக் ஸ்ட்ரோக் போட்டுகிட்டு இருந்துச்சு..!

ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

02 December 2008

துணுக்குகள்...

மொக்கையின் மாமியார் செத்துப் போயிட்டாங்க..! மொக்கை திடீர்ன்னு குமுறிக்குமுறி அழ ஆரம்பிச்சாரு.. மிஸஸ்.மொக்கை கடுப்பாயிருச்சு..

"சரிதான் நிறுத்துங்க.. எங்கம்மாவை உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. எதுக்கு இப்போ அவங்க செத்துக் கிடக்கறதைப் பார்த்து உருகி, உருகி ஓவர் ஆக்ட் பண்றீங்க..?"

"இல்லேப்பா.. என் அழுகைக்குக் காரணம் என்னன்னா.. உங்க அம்மா அசையறது போல இருக்கு.. பொழைச்சு எழுந்துடுவாங்களோன்னு பீதியா இருக்கு..!"

_______________________________________________________________


அந்த காலத்துல, ஞானிகளும், முனிவர்களும் பசி தூக்கம் பாராமல், பச்சைத்தண்ணி குடிக்காமல், குடும்பத்தக்கூட நெனைக்காம, சிரிப்பு கொண்டாட்டம் இல்லாம தவம் இருப்பாங்க..

இப்பவும் அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கத்தான் செய்யறாங்க.. அவங்க பேரு..

மென்பொருள் பொறியாளர்கள்..!

_______________________________________________________________


மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

_______________________________________________________________

ரொம்ப லவ் ஏன் ஃபெயிலியர் ஆகுது தெரியுமா..?

ஒரு ஆளு அதிகமான அளவுல காதலிச்சாலும்,
இன்னொரு பார்ட்டி, அதிகமான ஆளுகளைக் காதலிக்கிறதுனாலதான்..!

நன்றி அரசர் நகைச்சுவை

30 November 2008

துணுக்குகள்....

"வக்கீல் சார்... வர்ற இருபதாம் தேதி உங்க ராசியைச் சனி பிடிக்குது."

"ஒரு ஆறு மாசம் வாய்தா வாங்க முடியாதா ஜோசியரே?"

--------------------------------------------

இப்ப வரும் தர்மா மீட்டர்ல சிலது தப்பு தப்பா ஜுரம் காட்டுதாமே டாக்டர்?"

"ஆமாம். 'அதர்மா' மீட்டரா இருக்கு!"

---------------------------------------------

"என்ன மொக்கை... பாதி ராத்திரியில் வீடேறி வந்து எழுப்பி எதுக்காக கோணிப் பை இருக்கான்னு கேட்கறீங்க?"

"எங்க வீட்டுக்கு வந்திருக்கிற திருடன்தான் கேட்கச் சொன்னான். திருடின பொருளை மூட்டை கட்ட வேணுமாம்...."

----------------------------------------------

"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

-----------------------------------------------

"இருக்கற வீட்டை உயில்ல எழுதி வைக்கப் போறீங்களா! யார் பேருக்கு?"

"வீட்டு சொந்தக்காரன் பேருக்குத்தான். என் மறைவுக்குப் பிறகு அவனே இதை அனுபவிக்க வேண்டியதுன்னு உயில் எழுதிடப் போறேன்!"

------------------------------------------------

"ஆபரேஷன் ஆன பிறகுதான் மயக்கம் தருவீங்களா! ஏன் நர்சம்மா இப்பட சொல்றீங்கி?"

"மயக்கம் கொடுக்கிற டாக்டர் ரெண்டு மணி நேரம் லேட்டாகத்தான் வருவாராம். அதுக்குள்ளே ஆப்ரேஷன் பண்ற டாக்டர் அவசரப்படறார்.. வேற ஒரு ஆபரேஷனுக்கு போகணுமாம்..!

---------------------------------------------

"பேய்னா அது சாதாரணமா பாழடைஞ்ச பங்களாலதானே இருக்கும்? இந்தப் பேய் மட்டும் ஏன் பாழடைஞ்ச குடிசையில இருக்கு?"

"இது ஏழைப் பேயாம்!"

---------------------------------------------

28 November 2008

இது வேலைக்கு ஆகாது...!

மூன்று ஜோடிகள் சொர்க்கத்தின் வாயிற்கதவைத் தட்டினர்.. வாயிற்காவலன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்..

முதல் ஜோடியில் ஆண் : நாங்கள் உள்ளே போகலாமா..?

வாயிற்காவலன் : கூடாது.. நீ வாழ்நாள் முழுதும் மண்ணாசை பிடித்துத் திரிந்தாய்.. மேலும் நீ மருதன் என்று நிலத்தின் பெயரையே கொண்டிருக்கிறாய்.. திரும்பிப் போ..!

2வது இணையில் ஆண் : நாங்களாவது........?

வாயிற்காவலன் : இயலாது.. முதல் ஜோடியாவது பரவாயில்லை.. நீ பொன்னாசை வெறி பிடித்து அலைந்தவன்.. மேலும் உன் பெயர் முத்தன். போ... போ..!

இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மூன்றாவது ஜோடி பெண் தன் ஆண் இணையைப் பார்த்து சொன்னாள்..

"சுக'ந்தா..! இது வேலைக்கு ஆகாது.. வா.. போவோம்..!"

நன்றி அரசர் நகைச்சுவை

25 November 2008

மிஸ்டர்.மொக்கை..!

மிஸ்டர்.மொக்கை மோட்டார் சைக்கிளில் மனைவியோடு சாலையில் போனார். கொஞ்சதூரம் போனபின், ஒரு போலீஸ் கார் அவரைத் துரத்தி வந்து வழிமறித்தது.. அதிர்ச்சியடைந்த மொக்கை என்னவென்று விசாரிக்க, அதிகாரி சொன்னார்..

"என்னா மேன்.. உன் மிசஸ் 5 கிலோ மீட்டருக்கு அப்பால் பைக்லேருந்து கீழே விழுந்துட்டாங்க. அதுகூட தெரியாம வந்துகிட்டு இருக்கே..!

மொக்கை பதிலளித்தார்..

கடவுளுக்கு நன்றி.. என் காதுதான் செவிடாயிடுச்சோ என்னமோன்னு பயந்துட்டேன்.. அவ தொணதொணப்பு என் காதில் கொஞ்ச நேரமா கேட்கலியேன்னு..!
______________________________________________________________

மொக்கையின் நண்பர் : அந்தக் கட்சிப் பத்திரிகையில் வேலை செய்துகிட்டு இருந்தியே.. இப்போ திடீர்ன்னு நிறுத்திட்டாங்களாமே.. என்ன ஆச்சு..?

மொக்கை : 'தலைவர் பதிலளிக்கிறார்'ன்னு அச்சுக் கோக்கறதுக்கு பதிலா, 'தலைவர் பல்லிளிக்கிறார்'ன்னு கோத்து தொலச்சிட்டேன்..!

22 November 2008

மனித இனம் எப்படி தோன்றிற்று..?

மிஸ்டர்.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்..

"கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"

குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர்.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்..

"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"

மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்..

"என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!

நன்றி அரசர் நகைச்சுவை

20 November 2008

பெரிசா தைச்சுடாதீங்க....

எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..

தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?

இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

xxxxxxxxxxxxxxxx

நீங்க சமயத்துல செஞ்ச உதவிக்கு என் தோலை செருப்பா தைச்சுப் போடணும் சார்....

வெரிகுட்! என் செருப்பு அளவு எட்டு. மறந்து பெரிசா தைச்சுடாதீங்க....

xxxxxxxxxxxxxxxxx

மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

18 November 2008

வாயில்லா ஜீவன்..!

திருமதி.மொக்கையும், ஜூனியர் மொக்கையும் ஒரு ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்துக்குச் சென்றிருந்தனர். திருமதி.மொக்ஸ் மிகவும் விலை உயர்ந்த, அபூர்வ விலங்கினத்தின் தோலால் செய்யப்பட்ட மேலாடை ஒன்றைத் தேர்வு செய்தாள். இதைப் பார்த்த ஜூனியர் மொக்கை சொன்னான்..

அம்மா.. உனக்குத் தெரியுமா..? இந்த மேலாடைகளை வாங்குவதன் மூலம் உன்னை அறியாமலே ஒரு பரிதாபத்துக்குரிய, வாயில்லா ஜீவனுக்கு தீங்கு இழைக்கிறாய்..!

திருமதி. மொக்கை சொன்னாள்..

கவலைப்படாதே குட்டி மொக்கை.. இதற்கான பணத்தை உன் தந்தை உடனடியாக செலுத்தவேண்டியதில்லை. சுலபத்தவணைகளில் மெதுவாக செலுத்தலாம்..!

நன்றி அரசர் நகைச்சுவை

15 November 2008

'நம்ம தலைவரு.......

நமது நாற்பது தொகுதி வேட்பாளர்கள் பட்டியலைப் பார்த்து மக்கள் என்ன பேசிக்கிறாங்க?''

''அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஞாபகத்துக்கு வர்றதா சொல்றாங்க தலைவரே!''
________________________________________________________________

''நம்ம தலைவரு இதுக்கு முன்னாடி இந்தத் தொகுதியில பல பேரை டெபாசிட் இழக்க வெச்சிருக்காரு..!''

''அவ்வளவு செல்வாக்கு உள்ள தலைவரா...?''

''இல்லய்யா... ·பைனான்ஸ் கம்பெனி வெச்சிருந்தவரு!''
________________________________________________________________

''நாட்டில் இருக்குற விலைவாசி உயர்வு தலைவரை ரொம்பப் பாதிச்சுடுச்சாம்...''

''அவருக்கு அவ்ளோ இரக்க குணமா?''

''ஒரு வோட்டுக்கு ஐந்து, பத்து கொடுத்த காலம் போய்... இப்ப நூறு ஐந்நூறு கொடுக்க வேண்டியதா இருக்கேன்னு வருத்தப்படுறார்!''
________________________________________________________________

''தலைவரே... செல்போன்ல ஏன் வைப்ரேஷன் வெச்சுத் தொலைச்சீங்க... பாருங்க. நீங்க உதர்றதைப் பார்த்து தோல்வி பயத்துல உதர்றதா எதிர்க்கட்சிகள் சொல்றாங்க!''
________________________________________________________________

13 November 2008

காபியை மறந்துட்டுப் போறீங்களே..!

மிஸ்டர்.மொக்கை தாயகம் திரும்பிக்கொண்டிருந்தார். அது ஒரு இடைநில்லா வானூர்தி.சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. விமானிகள் அறையிலிருக்கும் ஒலிவாங்கி இயங்கிக் கொண்டிருப்பது தெரியாமல், ஒரு விமானி மற்றவரிடம் சொன்னார்..

ரொம்ப களைப்பா இருக்குப்பா..! இந்த மீட்டர்களையும், மானிட்டர்களையும் பார்த்து பார்த்து அலுத்துப் போயிடுச்சுப்பா.. ஒரு ஸ்ட்ராங் காப்பியும், ஒரு அழகான பொண்ணும் இப்போ இருந்தா.. அவள் மடியில் படுத்துகிட்டு காபியை அனுபவிச்சு குடிப்பேன்..!

இந்த உரையாடல் பயணிகள் பகுதியில் தெளிவாக ஒலிபரப்பு ஆவதைக் கவனித்த ஒரு விமானப் பணிப்பெண் விமானிகளை எச்சரிப்பதற்காக அவசரமாக விமானிகள் அறையை நோக்கி ஓடினாள்..

இதைக் கவனித்த மொக்கை சொன்னார்..

"மிஸ்.. காபியை மறந்துட்டுப் போறீங்களே.. அதையும் எடுத்துட்டு போங்க..!"

நன்றி அரசர் நகைச்சுவை

10 November 2008

துணுக்குகள்

100 வயதுவரை வாழ்வது எப்படிங்கற புத்தகத்தை கொடுத்தவரை உன் தாத்தா திட்ட‌றாரே ஏன்?

அவருக்கு வயது 102.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என்ன எலுமிச்சம்பழம் இவ்ளுண்டுதான் இருக்கு?

இது எலுமிச்சம்பழம் இல்லங்க சாத்துக்குடி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஜட்ஜ் : சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?

திருடன் : ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?

அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில்
நடக்கும் வியாதியாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த கார் வாங்கினதில இருந்து ரிப்பேருக்காக
ஒரு ரூபாய் கூட கொடுக்கல தெரியுமா...!

அப்படித்தான் மெக்கானிக்கும் சொன்னான்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

செவிட்டு மெஷின்......

மிஸ்டர்.மொக்கைக்கு மனைவியிடம் அறை வாங்கியதில் காது செவிடாகிவிட்டது. செவிட்டு மெஷின் வாங்கக் கடைக்குப் போனார்.. கடைக்காரர் பல மாடல்களை எடுத்துக்காட்டினார்..

இதைப் போட்டுப் பாருங்க சார்.. காதுக்குள்ளேயே வச்சுக்கலாம்.. வெளில தெரியாது.. விலை 5000 ரூபாய்..

ரொம்ப விலை அதிகமாருக்கே..

இதைப் பாருங்க.. காது மடலுக்கு வெளில வச்சுக்கலாம்.. ரொம்பத் தெளிவா கேட்கும்.. விலை 3000 ரூபாய்..

200 ரூபாய்ல ஒண்ணும் இல்லையா..?

மொக்கையை ஒரு தடவை முறைத்துப் பார்த்த கடைக்காரர் சோப்புப் பெட்டி போன்ற ஒன்றையும் ஒரு ஒயரையும் எடுத்துக் கொடுத்தார்..

இது நல்லா கேட்குமா..?

கேட்காது.. இது பழய மாடல்.. ரிப்பேர் வேற..

அப்புறம் எப்படி எனக்கு காதில் விழும்..?

இது உன்கிட்ட இருக்கறதைப் பார்த்தாலே, அவனவன் கத்திப் பேசுவான்.. நீ காதில் வாங்கிக்கலாம்..!


நன்றி அரசு

09 November 2008

விமானிகள் இல்லா விமானம்..

உலகின் முதல் கணிணி மூலம் கட்டுப்படுத்தப்பட்டு இயங்கும் பயணிகள் விமானம் தன் வெள்ளோட்டத்தைத் துவக்க இருந்தது. விமானிகளோ, பணியாளர்களோ எவரும் இலர். தானியங்கிப் படிகள் மூலம் விமானத்துக்குள் நுழைந்த 200 பயணிகள் தங்கள் பயணச்சீட்டில் குறிக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். படிகள் விலகி, கதவுகள் தாமாகவே தாழிட்டுக் கொண்டன.

விமானம் ஓடுபாதையில் பயணத்தைத் துவக்கி, விண்ணில் எழும்பியபோது, விமானத்துக்குள் பதிவு செய்யப்பட்ட கணிணிக்குரல் பயணிகளை வரவேற்றது..

வணக்கம் சீமான்களே.. சீமாட்டிகளே.. !

1800 கோடி டாலர் அற்புதமான தானியங்கி விமானத்தின் முதல் சோதனை ஓட்டத்தில் பங்கேற்றிருக்கும் அதிர்ஷ்டசாலிகள் நீங்கள். உங்கள் பெயர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட இருக்கிறது.

இவ்விமானத்தின் அனைத்து இயக்கங்களும் கணிணி மூலம் துல்லியமாக இயக்கப்படுகின்றன. எல்லாமே சிறப்பாகவும் சரியாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன. எதுவுமே தவறிப் போக வாய்ப்பே இல்லை.. க்ரீச்..கடக்.. தவறிப் போக வாய்ப்பே இல்லை.. க்ரீச்.. கடக்.. தவறிப் போக வாய்ப்பே.. க்ரீச்..க்ரீச்.. க்ரீச்.. கடக்... வாய்ப்பே...க்ரீச்.. க்ரீச்..!

25 September 2008

நிகழ்ச்சி ஆரம்பம்..!

மிஸ்டர்.மொக்கை வெட்டியாக ஊர் சுற்றுபவர். ஒருநாள் எங்கெங்கோ சுற்றிவிட்டு மாலையில் களைப்பாக வீடு திரும்பினார்.வந்த*தும் வராததுமாக, தொலைக்காட்சி ரிமோட்டை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, மனைவியை அதிகாரமாக அழைத்து,

"நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்குள் நல்ல காஃபி போட்டு எடுத்து வா..!"

என்று ஆணையிட்டார். திருமதி.மொக்கை தன் கணவரின் மீது கொலைவெறியில் இருந்தாலும், பேசாமல் போய் காபி போட்டுவந்து கொடுத்தார். காபியை கையில் கூட வாங்காத மொக்கை,

"காபின்னா.. வெறும் காபிதான் தருவியா..? ஓடு.. நிகழ்ச்சியைத் துவங்குவதற்கு முன் கொறிக்க ஏதாவது எடுத்து வா.."

என்று விரட்டினார். இம்முறையும் கணவரை மன்னித்துவிட்ட மனைவி, மறு பேச்சு பேசாமல் போய் மிக்சர் எடுத்து வந்தார்.

மிக்சரை கொஞ்சம் வாயில் போட்ட மொக்கை,

"சரி.. சரி.. மரம் போல நிற்காதே.. நிகழ்ச்சி ஆரம்பம் ஆகுமுன் மின்விசிறியை சுழல விடு.. அந்த டீபாயை நான் கால் வைத்துக்கொள்ள ஏதுவாக என் அருகே இழுத்துப்போடு. ம்ம்ம்ம் சீக்கிரம்..!"

என்று ஆணையிட்டார்.. பொறுமை எல்லை மீறிய திருமதி,
ஆவி பறக்கும் காபியை, மொக்கை தலையில் எடுத்து கொட்டினார்.கூடவே..

"என்னாய்யா அதிகாரம் தூள் பறக்குது..? வெட்டிச் சோறு தின்னும்போதே இவ்வளவு சவடாலா..? என்னிக்காவது உருப்படியா ஒரு காரியம் செய்திருக்கியா..? அப்படி என்ன நிகழ்ச்சி கொள்ளை போகப்போகுது..? ஒரேயடியா ஆடறே.. ஒடம்பு எப்படி இருக்கு..?

என்று குதறினாள். தலையில் ஊற்றப்பட்ட காபியை வழித்து விட்ட மொக்கை..முணுமுணுத்தார்..

"நிகழ்ச்சி ஆரம்பிச்சுருச்சு..!"

சில சிரிப்'பூ'க்கள்...

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

ooooooooooooooooooo

'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''

''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்''

''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.''

ooooooooooooooooooo

நண்பன்: ஏண்டா, உன் தாத்தா ரொம்ப நாளா கோமாவிலே இருந்துட்டு இப்போ எழுந்துட்டாராமே. முதல்லே என்ன கேட்டாரு?

மற்றவன்: நம்ப தியாகராஜ பாகவதர் படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு கேட்டாரு!

oooooooooooooooooooo

ஏம்பா, நான்தான் இந்த பத்திரிகைக்கு ஆயுள் சந்தா கட்டி இருக்கேனே, இப்போ திடீர்னு வருட சந்தா கேட்டா எப்படி?

பின்ன என்ன? நீங்க எழுபது வருடத்துக்கு முன்னாடியே ஆயுள் சந்தா கட்டி இருக்கீங்க! இவ்வளவு வருடம் உயிரோடு இருப்பீங்கன்னு நாங்க கண்டோமா!! சரி பணத்தை எடுங்க?''

ooooooooooooooooooo

நேரம் கிடைச்சா கீழே உள்ள வலைப்பூக்களுக்கு போய்ப் பாருங்க.. தவறாம உங்க கருத்துகளையும் பதிவு செய்யுங்க.

நன்றி நண்பர்களே..!

சின்னா + மொக்கை = டபுள் தமாக்கா..!

சின்னா ஒரு நாய்க்குட்டியை ஆசையாக வளர்த்து வந்தான். அதனுடன் பேசுவதும், விளையாடுவதுமாக*, ஹட்ச் நாய் + பையன் போல இருவரும் இணைபிரியாமல் இருந்து வந்தார்கள். சின்னாவுக்கு தன் நாய்க்குட்டிதான் உலகமாக இருந்தது.

இப்படி இருக்கையில் ஒருநாள் சின்னா பள்ளி சென்றிருக்கும் வேளையில் நாய்க்குட்டி காரில் அடிபட்டு பரலோகம் போய்விட்டது. அம்மா இதை எப்படி சின்னா எடுத்துக்கொள்வானோ என்று கவலைப்பட்டாள். மாலை சின்னா வந்தவுடன், நாய்க்குட்டியைத் தேடினான். அம்மா மெல்ல நடந்ததைச் சொல்லி,

" கவலைப்படாதே..சின்னா..! உன் நாய் எங்கும் போய்விடவில்லை.. இன்னேரம் கடவுளின் மடியில் இருக்கும்..!

சின்னா மெல்ல வினவினான்..

செத்துப்போன நாயை மடியில் வச்சுகிட்டு கடவுள் என்னம்மா பண்ணுவாரு..?
________________________________________________

நாய் கதையை சொன்னதும்தான் நினைவுக்கு வருகிறது. ஒருநாள் நம்ம மொக்கையை நாய் கடித்து விட்டது. வெறிநாய் ஆகையால், மொக்கையின் நிலைமை படு சீரியஸ் ஆகிவிட்டது. டாக்டரும் நாள் குறித்துவிட்டார்.

மொக்கையின் நண்பர் ஒருவர், கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்று போனார். அப்போது மொக்கை தீவிரமாக ஏதோ எழுதிக்கொண்டிருப்பதிப் பார்த்து கேட்டார்..

" ஹேய்.. மொக்கை.. டோன்ட் பி பேனிக்யா.. உயில் எழுத இப்போ என்ன அவசியம்..? "

மொக்கை சொன்னார்..

" எவன் சொன்னான்.. நான் உயில் எழுதறேன்னு..? நான் யார் யாரைக் கடிக்கணும்ன்னு லிஸ்டுல்ல தயார் பண்ணிகிட்டுருக்கேன்..!.. கொஞ்சம் இரு.. இதோ வந்துடுறேன்..!"

10 July 2008

திருவாளர் மொக்கையன்..

மிஸ்டர் மொக்ஸ் உடம்பைக் குறைக்க உதவும் உணவு ஒன்றை வாங்கி வந்தார்.. அதில் போட்டிருக்கும் முறைப்படி வெந்தது பாதி..வேகாதது பாதியாக சமைத்து சாப்பிட்டார். அதன் கேவலமான ருசியைப் பொறுத்துக்கொண்டு சிரமப்பட்டு 1 மாதம் சாப்பிட்டு எடை பார்க்க 5 கிலோ கூடியிருந்தது. கோபமாக கடைக்காரனிடம் பாய்ந்தார்..

தினம் வந்து ஒரு பாக்கெட் வாங்கிட்டுப் போறேனே.. ஒருநாளாவது சொல்லியிருக்கியா.. இது உடம்பு உப்புற உணவுன்னு..?

இல்லையே.. இது இளைக்க வைக்கிற உணவுதானே..?

பின்ன ஏன் எனக்கு மட்டும் உப்புது..?

கடைக்காரன், மொக்ஸ் சமைக்கும் முறை, சாப்பிடும் முறை எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பாக்கெட்டின் மேல் இருந்த அறிவிப்பைச் சுட்டிக் காட்டினான்..அதில்....

" 6 பேருக்கு தேவையான உணவு.."

என்று இருந்தது..!
__________________________________________

மிஸ்டர் மொக்கை ஒரூமுறை பெட்ரோல் செலவைக் குறைக்க சைக்கிள் ஒன்றைப் புதிதாக வாங்கினார்..ஆனால் தொடர்ந்து காரிலேயே அலுவலகம் வந்தார்.. நண்பன் கேட்டான்..

என்ன மொக்ஸ்..? சைக்கிள் வாங்கினே போல.. ஆனா கார்லேயே சுத்திகிட்டு இருக்கே..?

அதை ஏன் கேட்கிறே.. அந்த சைக்கிள்ல ஏதோ கோளாறு இருக்கு..சீட்டுல ஏறி உக்காந்ததுமே பொத்'துன்னு கீழே விழுந்துடுது.. கார் மாதிரி ஸ்டெடியா நிக்க மாட்டுது..!
_________________

செவ்வி = பேட்டி

சீன நாட்டின் தலைவர் ஒருவர் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர்களுக்கு செவ்வி அளித்தார்..
செய்தியாளர் 1 : தோழரே.. உங்கள் விமானப்பயணம் எப்படியிருந்தது..?
சீனத் தலைவர் : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ... கொய்ங்ங்ங்ங்.. ஊஊஊஊஉ.. டட்ட்ட்ட்.. மிகுந்த இனிமையாக இருந்தது நண்பரே.. நன்றி..!
செய்தியாளர் 2 : இந்திய* சீன உறவு குறித்து என்ன சொல்ல விழைகிறீர்கள்..?சீனத் தலைவர் : கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஊய்ய்ய்ய்ய்ய்ய்... டட்ட்ட்ட்ட்ட்ட்ட்.. இது இன்று நேற்றல்ல.. எமது யுவான் சுவாங் காலத்திலிருந்தே தழைத்து வரும் சீரிய உறவு.. மிக்க மகிழ்ச்சி..!
சீனத்தலைவர் முதலில் வினோதமான ஒலிகள் கிளப்புவதும், பின்னர் அழகிய தமிழில் பதிலளிப்பதும் கண்டு வியந்த ஒரு செய்தியாளர் கேட்டார்.." தோழரே.. இவ்வளவு அழகான தமிழை எங்கு கற்றுக்கொண்டீர்கள்..?"
சீனத் தலைவர் : சொய்ய்ய்ய்ங்.. ஹூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... டட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் .. எங்கள் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் "நவ சீனா தெற்காசிய தமிழ் வானொலி" மூலமாகத்தான்..!

02 July 2008

துணுக்குகள்

1.அது என்ன வீரப்பன் வெடி ?
மற்ற வெடியை வெடிச்சா கந்தக வாசம் வரும். .. இந்த வெடியை வெடிச்சா சந்தன வாசம் வரும் * _______________________________________________________
2.அது என்ன வீரப்பன் வெடி ?
பத்தவெச்சா அது பாட்டுக்குப் பேசாமலே இருக்கும். திடீர்னு நாம எதிர்பார்க்காத நேரத்துல வெடிச்சிடும் * _______________________________________________________
3.அது என்ன வீரப்பன் வெடி ?
இது வெடிக்கற சத்தம் போலீஸ் காரங்க தவிர, மத்த எல்லோருக்கும் கேட்கும் *
_______________________________________________________
4.அது என்ன வீரப்பன் வெடி ?
ஒரே இடத்தில் வெடிக்காம இடம் மாறி மாறிப் போய் வெடிச்சுக்கிட்டே இருக்கும் *
_______________________________________________________
5.எல்லா வி.ஐ.பி-யும் ஒரே இடத்துல கூடி, வர்ற ராக்கெட் வெடியை அண்ணாந்து பார்த்துக்கிட்டிருக்காங்களே. .. என்னவாம். .?
அதுவா. .. வீரப்பன் அதுல வெச்சு ஏதோ காஸெட் அனுப்பியிருக்கானாம் * _______________________________________________________
6.என்ன இது, போலீஸ்காரங்கள்லாம் கூட்டமா சந்தனக்காட்டுக்குப் போறhங்க.. . வீரப்பனைப் பிடிக்கவா.. .?
இல்லீங்க.. . வீரப்பன் கிட்டே தீபாவளி மாமூல் வாங்கறதுக்கு * _______________________________________________________
7.அப்பா. .. தீபாவளிக்கு நீங்க வைரமோதிரம் செய்து போடாம உங்க மாப்பிள்ளை இனி இங்கே வரவே மாட்டாராம். ..
நிஜமாவா.. .? ரொம்ப சந்தோஷம். .. அப்புறம் முடிவை மாத்திக்க மாட்டாரே ? _______________________________________________________
8.என்ன இது. கூட்டணி வெடின்னு சொன்னீங்க. ஆனா, இந்தக் கட்டுல ஒரே ஒரு வெடிதான் வெடிக்குது.
என்ன செய்யறது. கூட்டணில அந்த ஒரு வெடிக்கு மட்டும்தான் எல்லா பவரும்.
_______________________________________________________
9.கள்ளக் கணக்கு எழுதறதுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமப் போயிடுச்சு.
எதைச் சொல்றீங்க ?
தரைச் சக்கரத்துக்கு பஞ்சர் ஒட்டியதாக கணக்குக் காட்டியிருக்காங்க * _______________________________________________________
10.சங்கு சக்கரம் மாதிரி நீ வளைய வளைய வர்றதையும் மத்தாப்பு மாதிரி நீ சிரிக்கிறதையும் பாத்துட்டு, ராக்கெட் வேகத்துல என்னை லவ் பண்றேன்-னு அந்தப் பட்டாசுக் கடைக்காரர் பெண்ணுக்கு லவ் லெட்டர் எழுதினியே.. . என்ன ஆச்சு ?
புஸ்வாணமாதான் * _______________________________________________________
11.பட்டாசை வெச்சுக்கிட்டு எதுக்கு ஜெனரேட்டரைப் போடறhரு.. ?
எலெக்ட்ரிக் பட்டாசாம். .. கரண்ட் கட்டாம் * _______________________________________________________
12.அனுமதி இல்லாம பட்டாசுக்கடை வெச்சிருக்கீங்களே. .. அதிகாரிங்க வந்து கேட்க மாட்டாங்களா ?
அனுமதி வாங்கி கடை வெச்சா மட்டும் அதிகாரிங்க வந்து கேட்காமலா இருக்கப் போறhங்க * _______________________________________________________
13.மோதிர விரல்லே தேள் கொட்டிடுச்சுன்னு மாப்பிள்ளை சந்தோஷமா குதிக்கிறhர்.. .
ஏன் ?
விரல்வீங்கிப் போச்சாம். .. தீபாவளிக்கு மாமனார் பெரிய மோதிரமாத்தான் போட வேண்டி வருமாம் * _______________________________________________________
14.நாம அரசியல் பேசினது போதும். .. கொஞ்சம் ஆன்மீகம் பேசுவோமே.. . வாழ்க்கைலே ரொம்பவும் ஒட்டிக்காம பட்டதும் படாததுமா தாமரை இலை தண்ணீர் போல. ..
த.மா.கா-லே சிதம்பரம் போலன்னு சொல்லுங்க. ..* _______________________________________________________
15.இதுதாங்க கிரிக்கெட் வெடி *
இதுல என்ன ஸ்பெஷல். ..?
பெட் கட்டினாதான் வெடிக்கும் * _______________________________________________________
16.மாப்பிள்ளை வீட்டார் தீபாவளிக்கு பஸ்ல வர்றhங்கன்னதும் ஏன் தலையில கைவெச்சு உட்கார்ந்துட்டீங்க.. .?
தனி பஸ் வெச்சுக்கிட்டு வர்றhங்களாம் * _______________________________________________________
17.எங்கப்பாவுக்கு எதையுமே முறைப்படிதான் செய்து பழக்கம்.. .
அதுக்காக அவர் ராக்கெட் விடறதுக்கு, என்னை நுhறலிருந்து கௌண்ட் டௌன் எண்ணச் சொல்றது டூ மச் * _______________________________________________________
18.சித்தி, சத்யா, கோகிலா, வைதேகினு புது வெடிங்க வந்திருக்கு போலிருக்கே. ..?
பழைய லட்சுமி, சரஸ்வதி வெடிங்கதான். .. டி.வி. பாதிப்புல பெயர் மாறி வந்திருக்கு *
_______________________________________________________
19.என்னோட மாமனாருக்குப் பிரமாண்டமா செலவு பண்ணியே பழகிப்போச்சு. ..
தலைதீபாவளிக்கு உனக்கு என்ன பண்றhர்..?
தங்கக் கம்பிமத்தாப்பு செய்ய ஆசாரிகிட்டே ஆர்டர் கொடுத்துட்டு வந்திருக்காருன்னா பாரேன் * _______________________________________________________
20.என்னப்பா. .. சம்பிமத்தாப்புல இவ்ளோ பெரிய கம்பியெல்லாம் இருக்குது *
இந்த மத்தாப்பை நீங்க வெடிச்சு முடிச்சவுடனே, கம்பிகளைக் கட்டட வேலைக்குப் பயன்படுத்திக்கலாம் *
நன்றி ஆனந்த விகடன் 22-10-2000 _______________________________________________________
21.என் பையன் வெடியா கொளுத்திக் காசைக் கரியாக்கறhன் *
நீங்க என்ன பண்ணறீங்க.. ?
கசாப்புக்கடை வெச்சிருக்கேன் *
அப்ப நீங்க கறியைக் காசாக்கறீங்க * _______________________________________________________
22.பட்டாசுக்கடையிலே கோழி புகுந்துட்டதுக்கு இப்படிப் பதர்றியே.. ?
புகுந்தது நெருப்புக் கோழியாச்சே *
_______________________________________________________
23.தீபாவளிக்கு வந்த உங்க மாப்பிள்ளை மாடியை விட்டு இறங்காம அப்பப்ப காஸெட் கொடுத்துவிடறhரே. .. என்னவாம்.. .?
வைரமோதிரம் போடணும்ங்கற கோரிக்கையை நிறைவேத்தினாதான் கங்கா ஸ்நானம் பண்ணக் கீழே இறங்குவாராம் *
_______________________________________________________
24.என்ன.. . போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏகப்பட்ட nஜhடிங்க பெட்டி படுக்கையோட வந்திருக்காங்க ?
எல்லோரும் நம்ம ஸ்டேஷன்ல லவ்மேரேஜ; பண்ணிக்கிட்டவங்க. தலை தீபாவளிக்கு வந்திருக்காங்க *
_______________________________________________________
25.எதுக்கு சார் உங்க வீட்ல பட்டாசு வெடிக்க என்னைக் கூப்பிடறீங்க ?
ஆபீஸ்ல நீங்க நிறைய பேரோட வேலைக்கு வேட்டு வெச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். அதனாலதான் *
_______________________________________________________
26.எப்படிடா உனக்கு தீக்காயம் பட்டுது ?
ஆட்டம் பாமை பத்த வெச்சப்போ, மழை துhறினதால நனையாம இருக்க பக்கத்துல நின்னு குடை பிடிச்சேன் *
_______________________________________________________
27.தலைவர் புஸ்வாணம் கொளுத்தி குழந்தை மாதிரி சந்தோஷப்படறhரே.. .
வத்தி வெக்கற வேலையாச்சே.. அவருக்கு பிடிக்காம போகுமா ?
நன்றி ஆனந்த விகடன் 22-10-2000 _______________________________________________________
28.உங்க பையன் எதுக்காக மண்ல உருண்டு அடம் பிடிக்கிறhன் ?
அவனுக்கு ரோல் பட்டாசு வேணுமாம் *
_______________________________________________________
29.நேத்து உங்க பட்டாசுக் கடைக்கு வந்து துப்பாக்கியக் காட்டி மிரட்டியவன் வெச்சிருந்தது போலி துப்பாக்கின்னு எப்படி தெரிஞ்சுது ?
மரியாதையா இருக்கற ரோல் கேப் எல்லாத்தையும் குடுத்துடு-ன்னு தானே மிரட்டினான்.. .*
_______________________________________________________
30.யானை வெடி ஏம்பா ஈரமா இருக்கு ?
அது. .. நீர் யானை வெடிங்க.. .*
_______________________________________________________
31.இரயில் வெடின்னு சொல்றீங்க, கொளுத்திவிட்டா மெதுவா போகுதே ?
இது கூட்ஸ் இரயிலுங்க *
_______________________________________________________
32.எதிர் எதிர் பட்டாசுக் கடைக்காரங்களுக்குள்ள பிஸினஸ் போட்டியாமே.. .?
ஆமாம். ஒருத்தர் பாம்பு வெடி வாங்கி ஸ்டாக் வச்சார்னா, இன்னொருத்தர் கீரி வெடி வாங்கி ஸ்டாக் வச்சிருப்பாரு *
_______________________________________________________
33.கொஞ்ச நேரத்துக்கு முன்னால பயங்கர சத்தத்தோட வெடிச்சதே, அந்த வெடி ஒண்ணு கொடுங்க.. .
யோவ், விளையாடுறியா அப்ப வெடிச்சது டிரான்ஸ்ஃபார்மர் *
நன்றி குமுதம் 26-10-2000 _______________________________________________________
34.ஏம்மா உங்களுக்கு எத்தனாவது பர்த் ?
(கைகுழந்தையுடன்) இதுதாம்பா எனக்கு முதல் குழந்தை.
_______________________________________________________
35.ஓடி ஓடிச் சம்பாதிச்சதா சொல்றீங்களே, என்ன வேலை பார்த்தீங்க ?
பைனான்ஸ் கம்பெனி நடத்தினேன் *
_______________________________________________________
36.எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும் வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ?
இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும். ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான் *
_______________________________________________________
37.என்ன முதலாளி * ஆயுத பூiஜ எல்லாம் எப்படி ?
நம்ம கடையிலே ஆயுதம் ஏதப்பா காகிதப் பூiஜதான் நடக்குது.
_______________________________________________________
38.உங்களை பார்த்தா சிரிப்பா வருது *
ஏன் ?
நீங்க சந்தோஷ மூட்ல இருக்கிறதா சொன்னீங்களே.. . அதான் *
_______________________________________________________
39.நீங்க கட்டிவிட்ட பல் செட்டில் இருபத்தஞ்சு பல்தானே டாக்டர் இருக்கு ?
நீங்க ஃபீஸை குறைச்சீங்க. நான் பல்லை குறைச்சேன் அவ்வளவுதான் *
_______________________________________________________
40.நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?
இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறhங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க.
ஓ.கோ.. .* என்னை மாதிரி ஓசில.. . சாப்பிட வந்தவர்தானா நீங்களும். ..*
நன்றி குங்குமம் 27-10-2000 _______________________________________________________
41.வீரப்பன் செய்தியை டி.வி-யில் வாசிச்சு வாசிச்சு அந்த அம்மாவுக்கு ரொம்ப அலுத்துப் போச்சாம் *
அதுக்காக மீண்டும் சலிப்புச் செய்திகள்-னு சொல்லணுமா ?
_______________________________________________________
42.கச்சேரிக்குத் தலைமை வகிக்க அமைச்சரைக் கூப்பிட்டது தப்பாப் போச்சு *
ஏன்.. . என்ன ஆச்சு.. .?
அவர்கூட வர்றவங்களுக்கெல்லாம் இலவசமா ஜhல்ராவும், ஜpங்குச்சாவும் கொடுக்கணுமாம் *
_______________________________________________________
43.தலைவர் மகளிர் அணிப் பெண்கள்கூட நெருங்கிப் பழகினாரு ?
அப்புறம் ?
இப்ப புதுசா குழந்தைகள் அணி ஒண்ணு உருவாயிருச்சு *
_______________________________________________________
44.தலைவர் தனக்கு விழற துண்டுகள்ல கட்சிக்கறை இருக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாரு *
ஏன் ?
நாளைக்கே கட்சி மாறினாக்கூட துண்டு உபயோகமா இருக்கணுமாம் *
_______________________________________________________
45.ராஜ;கிரண், டைட்டானிக் படத்தைப் பார்த்துப் படம் எடுத்தால் என்ன பெயர் வைப்பார் ?
என்ன பெயர் ?
எல்லாமே என் கப்பல்தான் *
_______________________________________________________
46.உலகில் முதன் முதலில் சிறு வயதில் பிரதமர் ஆனவர் யார் ?
யார் ?
வாஜ;-பாய் *
_______________________________________________________
47.அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?
ஏன் ?
அது ஜhம் ஜhம்னு நடக்கற கல்யாணம் *
_______________________________________________________
48.காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன் ?
ஏன் ?
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு *
_______________________________________________________
49.முனிவரைப் பாம்பு பார்க்கும், ஏன் ?
ஏன் ?
அவர் முகத்துல தவ-களை இருக்கு *

துணுக்குகள் 2

50.கிராமத்துல ஒரு திருவிழா, ஆனால் பெண்களே இல்லை. ஏன் ?
ஏன் ?
அது திரு-விழா, திருமதி-விழா இல்லையே *
________________________________________________________
51.போருக்குப் போகும் போது ஒருத்தர் குடை எடுத்துட்டுப் போனார். ஏன் ?
ஏன் ?
அங்கே குண்டுமழை பெய்யுது *
________________________________________________________
52.அனில் கும்ப்ளேவுக்குப் பெண் பிறந்தால் என்ன பெயர் வைப்பார் ?
என்ன பெயர் ?
பால திருப்புற சுந்தரி *
________________________________________________________
53.கல்யாணத்துல ஏன் மாடுகளை விடறதில்லை ?
ஏன் ?
கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர், மேய்ஞ்சிடக் கூடாதில்ல *
________________________________________________________
54.அழகான பெண்களைப் பார்த்தால் நாய் எப்படி குறைக்கும் ?
எப்படி ?
வாவ் வாவ்னுதான் *
________________________________________________________
55.ஒரு காட்டில் நாலுபேர் போறhங்க. .. திடீர்னு ஒரு சிங்கம் வந்து மூணு பேரை அடிச்சிடுச்சு.. . ஒருத்தரை மட்டும் அடிக்கலை ஏன் ?
ஏன் ?
அவர் லயன்ஸ் கிளப் மெம்பர் *
________________________________________________________
56.அவரு அமெரிக்காவிலிருந்து வந்தவரு *
அதுக்காக செருப்பைக் கால்ல போடாம காதுல தொங்க விட்ருக்கிறது கொஞ்சம்கூட சகிக்கலை *
________________________________________________________
57.என்ன. .. அந்த எம்.எல்.ஏ. எல்லாம் ஒத்தை செருப்பா வைச்சிருக்காரு ?
எல்லாம் சட்டசபையில அவர்மேல விழுந்ததாம்.
________________________________________________________
58.செருப்பு அழகாயிருக்குன்னு சொன்னதுக்கு அவன்கிட்ட செருப்பைக் கழட்டிக் காமிச்சது தப்பாயிடுச்சு.. .
ஏன் ?
இன்னைக்கு சேலை அழகாயிருக்குன்னு சொல்றhன் *
________________________________________________________
59.அந்த கல்யாண மண்டப வாசல்ல, விரல்ல எதுக்கு மை வைக்கிறhங்க ?
செருப்புப் போடாம வர்றவங்களுக்கு மட்டுமாம் *
________________________________________________________
60.கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தீங்களே. .. nஜhடிப் பொருத்தம் எப்படி ?
ஒரு செருப்பு கூட என் காலுக்குப் பொருந்தலை *
________________________________________________________
61.மற்ற தலைவர்களைவிட நம்ம தலைவர் பலபடி மேலே போய்ட்டாரா .. ? எப்படி ?
நாங்க ஜெயிச்சா பிரிட்டீஷ் ஆட்சியை கொண்டு வருவோம்-னு சொல்றhரே *
________________________________________________________
62.அரசியல்வாதியை லவ் பண்ணினது தப்பாப் போச்சுங்கறீயே. .. ஏண்டி ?
ஆசைக் காதலியை அணைக்க வரும் தலைவா. .. வருக-ன்னு தொண்டர்கள்கிட்டே நோட்டீஸ் அடிச்சி, பீச் ஏரியா முழுக்க ஒட்டி வைக்கச் சொல்லியிருக்கார் *
________________________________________________________
63.என்னங்க.. . எதிர்ல போற உங்க அம்மா. .. அப்பாவைத் திரும்பிப் பார்த்துகிட்டே வர்றீங்க ?
போய் பேச வேண்டியதுதானே *
நீ வேற.. . நாம தனிக்குடித்தனம் போனதிலேயிருந்து நான் அவங்களைத் திரும்பிப் பாக்கிறதே இல்லைன்னு.. . எல்லார்கிட்டேயும் சொல்லி வருத்தப்பட்டாங்களாம்.. . அதான்
________________________________________________________
64.ஏங்க.. .. நம்ப பொண்ணுக்குத் தூக்கத்துல நடக்கிற வியாதிங்க *
கவலைப்படாதே. .. சரி பண்ணிடலாம் *
அதுக்கில்லைங்க.. . பக்கத்து வீட்டுப் பையனுக்கு தூக்கத்துல ஓடற வியாதியாம் * ________________________________________________________
65.கல்யாணக் கேசட்ல நிறைய விளம்பரமா நடுவுல வருதே *
பூக்காரர், சமையல், நாதஸ்வர வித்வான்னு எல்லோரும் விளம்பரம் செய்திருக்காங்க.. .* ________________________________________________________
66.எதுக்கு தீபாவளி சமயத்துல பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடறீங்க ?
தீபாவளிப் பலகாரமெல்லாம் என் ஒருத்தனால செய்ய முடியாதே * ________________________________________________________
67.விபத்துலே காயம்பட்டதை அவர் ஏன் சைகையாலே சொல்றhரு ?
ஊமைக் காயமாம் * ________________________________________________________
68.டாக்டர் * நான் செத்துப் போறh மாதிரி அடிக்கடி கனவு வருது.. .
* கவலைப்படாதீங்க
* இனிமே அது கனவுல வராது. ________________________________________________________
69.காதலன் - நான் எப்போதுமே தோல்வியைக் கண்டு பயப்படாதவன் *
காதலி - அப்போ நல்லதா போச்சு. .. இந்தாங்க என்னோட திருமணப் பத்திரிகை *
________________________________________________________
70.அந்த டிக்கெட் பரிசோதகர் வேலைக்கு புதுசா ?
ஏன் கேக்கறே ?
டிரைவர் டிக்கெட் எடுக்கலைன ஃபெனால்ட்டி போட்டுட்டாரே * ________________________________________________________
71.கவர்ச்சி நடிகை சொந்தப்படம் தயாரிக்கப் போறhங்களா.. .?
டைட்டில் என்ன ?
மூடி வாழ்ந்தால் ஏது நன்மை * ________________________________________________________
72.வாகனங்கள் திரும்புற வளைவுலே ஏன் பொதுக்கூட்டம் நடத்துறhங்க ?
இந்த மீட்டிங் திருப்புமுனையா இருக்கணும்னு தலைவர் சொல்லிட்டாராம் * ________________________________________________________
73.தலைவருக்கு விவரம் பத்தாதா.. . ஏன் ?
இளைஞர் அணி, மகளிர் அணி மாதிரி கள்ள ஒட்டு அணிச் செயலாளரை நியமிக்கப் போறhராம் * ________________________________________________________
74.அவசரப் போலீஸைக் காதலிச்சது தப்பாப் போச்சு *
ஏன் ?
முதலிரவைக் கல்யாணத்துக்கு முன்னாடியே வைக்கணும்னு அவசரப்படறhர் * ________________________________________________________
75.கராத்தே மாஸ்டரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு ?
என்னாச்சு ?
முதலிரவிலே ஆ- ஊ-ன்னு கத்தி என் மானத்தை வாங்கிட்டாரு * ________________________________________________________
76.ஆபீஸ்ல மாடா உழைச்சது தப்பாப் போச்சு *
ஏன் ?
எனக்க ஒரு மாட்டுக் கொட்டகையை ஒதுக்கித் தந்துட்டாங்க.. .* ________________________________________________________
77.ஹேhட்டலில் வேலை செய்தவரை பூச்சி மருந்துக் கடையில் வேலைக்குச் சேர்த்தது ரொம்பவும் தப்பாப் போச்சா. .. ஏன் ?
யாராவது பூச்சி மருந்து கேட்டால் சாப்பிடவா, பார்சலா-ன்னு கேட்கிறhர் * ________________________________________________________
78.என்னப்பா * காபியில ஒரே ஃபினாயில் வாசனை அடிக்குது. ..?
நான்தான் சொன்னேனே * எங்க ஓட்டல்ல எல்லாம் சுத்தாமா இருக்கும்னு. ..* ________________________________________________________
79.உங்களுக்கு ரோடு ரோலர் மாதிரி ஒரு பொண்ணு இருப்பாளே ? எங்க ஆளையே காணும்
பக்கத்து வீட்டுப் பையன் தள்ளிக்கிட்டுப் போயிட்டான் * ________________________________________________________
80.வனப்பாதுகாவலர் வேலைக்கு ஆள் எடுக்க எல்லாருமே வந்தாச்சே.. .? இன்னும் ஏன் வெய்ட் பண்றhங்க ?
செலக்ஷன் செய்ய வீரப்பன் இன்னும் வரலையாம் * ________________________________________________________
81.என் காதலர் வீரப்பன் ரசிகர்டி *
எப்படிச் சொல்ற ?
என் பிறந்த நாளுக்கு வாழத்துக் கேசட் அனுப்பியிருக்காரே * ________________________________________________________
82.என் காதலி மாடர்னா மாறிட்டா *
என்னவாம் ?
இனிமே பீச் வேணாம்.. . டைடல் பார்க்ல சந்திக்கலாம்ங்கறh * ________________________________________________________
83.தலைவரு சினிமா பைத்தியமா இருப்பாரு போல இருக்கு *
ஏன் அப்படிச் சொல்றே ?
தேசியகீதம் பாடுனதும் ஒன்ஸ்மோர்னு கத்துறhரே * ________________________________________________________
84.நீயும் உன் மாமியாரும் சேர்ந்துகிட்டு டாக்டர் கிட்ட சண்டைக்குப் போனீங்களாமே.. .? ஏன்
குடும்பச் சண்டைல ஏற்படற காயத்துக்கு மருந்து போடமாட்டேன்னு டாக்டர் அடம்புடிக்கறhர்
________________________________________________________
85.எங்க தலைவர் ரொம்ப எளிமையானவர்.. . அதுக்காக அவரைக் கைது பண்ணதை கண்டிச்சு ரோடுல போற சைக்கிள் ரிக்ஷhவை யெல்லாம் கொளுத்தறது நல்லாயில்லை.. . ________________________________________________________
86.தலைவர் பணத்துக்கெல்லாம் ஃபேர் அன்ட்லவ்லி தடவிக்கிட்டு இருக்காரே, ஏன் ?
அதை தடவினா கருப்பெல்லாம் வெள்ளையாகும்னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டாரு.. . ________________________________________________________
87.என்ன டாக்டர் ஆபரேஷனுக்கு ஃபீஸ் வாங்கமாட்டீங்களா .. ?
ஆமாம். செய்கூலி இல்லை, ஆனா, சேதாரம் உண்டு.. . ________________________________________________________
88.அந்த மாமியார் மருமகள் சண்டையை பார்க்க தினமும் ஏகப்பட்ட கூட்டம் வருதாமே *
ஆமா * சண்டை முடிஞ்சதும் ஒரு கேள்வி கேட்டு பரிசு கொடுக்கறhங்களே * ________________________________________________________
89.கல்யாணத்துக்குப் பிறகு காதலிக்கிறதுதான் நல்லது.
அதுக்கு பெண்டாட்டி ஒத்துக்குவாளா ..? ________________________________________________________
90.குத்துச் சண்டை போட்டியில ஜெயிச்சவரோட மனைவிக்கு ஏன் பதக்கம் தர்றhங்க.. .?
அவங்கதான் அவருக்கு ட்ரெயினியாம். ________________________________________________________
91.ஸ்டேஜ;ல இருந்த தலைவர் ஏதாவது பேசுவார்னு எல்லாரும் ரொம்ப ஆவலா இருந்தாங்க.. .*
என்ன பேசுனாரு ?
எதுவும் பேசலை, அவர் இருந்தது கோமா ஸ்டேஜ;ல ஆச்சே * ________________________________________________________
92.இதய ஆபரேஷன் செய்ய வேண்டிய பேஷண்ட்டுக்கு டாக்டர் எதுக்கு கிட்னி ஆபரேஷன் செய்யறhர் ?
அவர்தான் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணராச்சே * ________________________________________________________
93.டி.வி மெகா சீரியல் எடுக்கிற டைரக்டர் வீட்டுக்கு கல்யாணம் போலிருக்கு .. .*
எப்படிச் சொல்றீங்க. .?
கல்யாணப் பத்திரிகையே இருபது பக்கத்துக்கு இருக்கே.. .* ________________________________________________________
94.ஜூனியர் வக்கீலா லேடியை நியமிச்சது தப்பாபோச்சு *
ஏன் ?
கேஸ் கட்டை கொண்டு வாங்கன்னு சொன்னா, குக்கர்ல இருக்கிற இருக்கிற கேஸ் கட்டை கொண்டு வர்றhங்க * ________________________________________________________
95.அவர், ஒரு காலத்துல கோயில்ல சிதறு தேங்காய் பொறுக்கி சாப்பிட்டவராம் *
இப்ப என்ன பண்றhரு ?
படிப்படியா வளர்ந்து கோயில் சொத்தையே சாப்பிடுறhரு *
________________________________________________________
96.டி.வி-ல அறிவிப்பாளர் வேலை கேட்கறியே. .. உனக்கு என்ன தகுதி இருக்கு.. .? எனக்கு ழ- சரியா வராது சார். ..* ________________________________________________________
97.இந்த ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்த அன்னிக்கு எவ்வளவு கனவு-களோட இங்கே வந்தேன் தெரியுமா ?
அடப்பாவி. ..* முதல் நாளே தூங்கிக்கிட்டுத்தான் இங்கே நுழைஞ்சியா ? * ________________________________________________________
98.புதுசா வேலைக்கு வந்திருக்கீங்க. .. உங்களுக்கு எதுவேணும்னாலும் தைரியமா கேளுங்க. ..*
என்னோட படுக்கை எங்கே சார் இருக்கு .. .? ________________________________________________________
99.அந்த எறும்பு மட்டும் ஏன் உப்பைச் சாப்பிடுது.. .?
அதுக்குச் சர்க்கரை வியாதியாம் * ________________________________________________________
100.டாக்டர். .. நீங்க கொடுத்த டானிக்குக்குப் பதிலா ஞாபகமறதியா என் கணவர் பெட்ரோலைக் குடிச்சுட்டார் *
அவரைக் கூட்டிக்கிட்டு வரவேண்டியது தானே *
எப்படி டாக்டர். .. பிடிக்க முடியலையே *

28 June 2008

"இது வேலைக்கு ஆவாதும்மா.. !"

நம்ம மொக்கை ஒரு டாக்டர்.. அதுவும் குழந்தைகளுக்கான வைத்தியர். அவரிடம் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளிடம் விளையாட்டாகப் பேசி, மருத்துவம் செய்வார். அதில் அவருக்குப் பெருமையும் கூட.
ஒருநாள் ஒரு பெண் தன் 3 வயது பையனை சிகிச்சைக்கு அழைத்து வந்தாள்.வழக்கம்போல, டாக்டர்.மொக்கை, அந்தச் சிறுவனிடம் தன் வேலையைக் காட்டினார். 00
அவன் காதைப் பிடித்து.." ஏண்டா கொழந்தே..இதுதானே உன் மூக்கு..?" என்று கேட்க,
அவரை சற்று வினோதமாக ஏறிட்ட சிறுவன் தன் அன்னையிடம் திரும்பிச் சொன்னான்.."இது வேலைக்கு ஆவாதும்மா.. இதுக்கு காது எது.. மூக்கு எதுன்னே தெரியல.. இதுகிட்டேயெல்லாம் என்னை

இப்படிக்கு.. உங்கள் நினைவில் வாடும் மனைவி.

பிரியமுள்ள கணவருக்கு,
வீட்டைப் பத்திரமாகப் பூட்டிக்கொண்டு போகிறீர்களா? புழக்கடையிலேயே சோப்பை வைத்துவிட்டுப் போய் விடாதீர்கள். வெய்யிலில் அது சாந்து மாதிரி ஆகிவிடும். வலை பீரோவை நன்றாகக் கவனிக்கவும். ஏதேனும் எறும்புகள் தென்படுகின்றனவா? வலை பீரோவின் கால்களுக்கு மறக்காமல் தண்ணீர் ஊற்றவும். கொஞ்சம் நெய் வைத்துவிட்டு வந்திருந்தேன். அதை என்ன செய்தீர்கள்? ஊறுகாய் கெடாமலிருக்கிறதா?
சலவைக்காரன் வந்தானா? பழைய பாக்கி துணிகளில் இரண்டு கொண்டு வரவேண்டும். மூன்றரையணா அவனே நமக்குத் தரவேண்டும். இந்தத் தடவை மொத்தமாக எத்தனை துணி போட்டீர்கள்? மூன்றாவது வீட்டிலே அந்தப் பையன் ஞானசம்பந்தம் அடிக்கடி வருகிறானா? அவன் வந்தால் நீங்கள் கூடவே இருங்கள். அவன் போன பிறகு எல்லாம் சரியாயிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். (அவனை வீட்டுக்குள் விடாமலிருப்பது ரொம்பவும் நல்லது.) எதிர்வீட்டில் 'காரம் போர்டு' வாங்கிக் கொண்டு போனார்கள். திருப்பிக் கொடுத்து விட்டார்களா? திருப்பிக் கொடுத்திருந்தால் காயினெல்லாம் சரியாயிருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கவும். ராத்திரியில் ரேடியோ கேட்கவேண்டாம். அணைக்க மறந்து போய் அப்படியே தூங்கிவிடுவீர்கள்.சாயிபாபா படத்துக்குப் பிரேம் போட்டு விட்டீர்களா? பிரேம் இல்லாவிட்டால் பரவாயில்லை என்பது என் அபிப்பிராயம். பிரேம் போடுகிற பணத்துக்கு புதிதாகவே வாங்கி விடலாம். காற்றில் ஜன்னல் அடித்துக் கொள்கிறதா? அதற்கு வைப்பதற்காக அளவாக ஒரு சின்னச் செங்கல் வைத்திருந்தேனே? அது இருக்கிறதா? படார் படாரென்று இரண்டு தடவை அடித்துக் கொண்டால் கதவு போய்விடும். ஜன்னல் திரையை நீங்களே சோப்புப் போட்டுத் துவைத்து விடுங்கள். சலவைக்குப் போனால் வருவதற்கு நாளாகும்.
புத்தக அலமாரிக்குச் சற்றுத் தள்ளி ஓட்டுப் பக்கமிருந்து வாலோடியாக ஒரு கரையான் சரம் இறங்கியிருந்ததே அதைத் தட்டிச் சுத்தம் செய்தீர்களா? சிறிது மண்ணெண்ணெய் புட்டியில் இருந்ததெல்லாம் தீர்ந்து விட்டதா? காப்பி போட்டுக் கொள்வதற்காகத் தினமும் எவ்வளவு மண்ணெண்ணெய் உபயோகப்படுத்துகிறீர்கள்? ஞபாகமாக ஆபீஸ் போகும்போது அடுப்பை அணைத்துவிட்டுப் போகவும். ஈரத்துணியை மழை வரும் போலிருந்தால் வீட்டுக்குள்ளேயே உலர்த்திவிட்டுச் செல்லவும். காய்ந்த துணிகளை மாலையில் ஆபீஸ் விட்டு வந்ததும் எடுத்து வைத்துவிடவும். மீட்டர் கட்டணம் எவ்வளவு ஆயிற்று? போன மாதத்தில் பணத்தை வரவு வைக்காமல் விட்டுவிட்டது பற்றி 'கம்ப்ளைண்ட்' செய்தீர்கலா

16 June 2008

*நங்கள் ஏழு பேரு ஓர் குடையின் கீழ் நடந்தோம்.
ஆனா ஒருத்தர் கூட நனையவில்லை எப்படி??
*மழையே பெய்யவில்லை


*டாக்டர் கதை எழுதினால் எப்படி எழுதுவார்??
*சாப்பாட்டுக்கு முன்பு,சாப்பாட்டுக்கு பின்பு

*பல் ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்??
*சொத்தையோட போகணும்


*குரைக்கிற நாய் கடிக்காது ஏன் தெரியுமா??
*ரெண்டு வேலையையும் ஒரே நேரத்துல அதால ரெண்டு வேலையும் செய்ய முடியாது


*நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடித்து விட்டார்களாம் ஏன்??
*யாரோ இங்க தமிழ் வாத்தியார் யாருன்னு கேட்டதுக்கு அடியேன் அடியேன் தான்னு சொல்லி இருக்காராம்

அப்பா: எக்ஸாம் ஹால்ல தூங்கிட்டு வரியே வெக்கமா இல்லை??
மகன்: நீங்கதானே சொன்னீங்க கேள்விகளுக்கு விடை தெரியலேன்னா முழிச்சிகிட்டு இருக்காதேடனு அதான் தூங்கினேன்

உங்க பையன் கோவிலுக்கு போனால் அதிகமா பொய் சொல்றானே ஏன்?
அவன் கோவில்ல மெய் மறந்துடுவான்

ஒரு காட்டில் வறுமை தாண்டவம் ஆடியது..

ஒரு காட்டில் வறுமை தாண்டவம் ஆடியது.. ஆமாங்க.. காட்டில்தான்.. அங்க பிரச்னை என்னன்னா சிங்கம் புலி, சிறுத்தை இதுகல்லாம் நிறைய இருந்துச்சுங்க. அதுக அடிச்சுத் தின்னதான் சின்ன மிருகம் எதுவுமே இல்லே..

இப்படி இருக்கையில், ஒருநாள் ஒரு சிறுத்தை வாயெல்லாம் ரத்தம் ஒழுக வந்துச்சு. மற்ற மிருகமெல்லாம் சுத்தி வளைச்சு கொக்கி போட்டுச்சு.

"மவனே.. நீ மட்டும் எங்க போய் முழுங்கிட்டு வரே..? ஒழுங்கா சொல்லிடு..!"

ஹீரோ சிறுத்தை , "போங்கப்பா ... எனக்கு தூக்கம் வருது.. காலையில் பார்த்துக்கலாம்"ன்னு சொல்லிட்டு தன்னோட குகைக்குள்ள போய் தூங்கிடுச்சு.

"பய நல்லா தின்னுட்டு வந்து களைப்பா தூங்கிட்டான்.. "

புலம்பிகிட்டே மத்த மிருகம் எல்லாம் குகை வாசலிலேயே தேவுடு காத்தன. விடிந்தது. ஹீரோ வெளியே வந்துச்சு.

"இப்பவாவது சொல்லித்தொலையேண்டா சனியனே..!" சிங்கம் உறுமியது.

"'நேற்று கீழ் காட்டுக்கு போயிருந்தேனா..." ஹீரோ இழுத்தது.

"அந்தக் கதையெல்லாம் வேண்டாம்.. வா.. இடத்தைக் காட்டு.." புலி பரபரத்தது.

ஹீரோ எல்லோரையும் அழைச்சுட்டுப் போச்சு. சும்மா இல்ல .. 65 கிலோ மீட்டர் ஸ்பீடுல.. வடிவேலு போல ஸ்பீடைக் குறைக்காம போயிட்டுருக்கும்போது, ஹீரோ ஒரு மாந்தோப்பை காட்டுச்சு.

எந்த இடம்டா.. சீக்கிரம் சொல்லு.. சிங்கம் சிடுசிடுத்தது.

அதோ நடு மரம் இருக்குதே உங்களுக்கு தெரியுதா..?

வேகத்தைக் குறைக்காத விலங்குகள் சொல்லின.. "ம்ம்ம் தெரியுது.. தெரியுது.. எல்லா விலங்கும் கூட்டு பாடின.

ஒரு பெருமூச்சை வெளியிட்ட ஹீரோ சொன்னது..

"நேற்று நானும் இதே வேகத்தில் வந்தபோது பசி மயக்கத்தில் எனக்கு அந்த மரம் தெரியலேப்பா.. அதான் வாயெல்லாம் ரத்தம்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"
அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன்.அது முதுகுல எச்சு துப்பினேன் சுப்பு:ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக தடவினேன் ஈரமா இருந்தது . அது நீ செஞ்சதுதானா??

டாக்டர்:நாய் கடிச்சால் தொப்புள சுத்தி பதினான்கு ஊசி போடணும்
நோயாளி: முடியாது டாக்டர்
டாக்டர்" ஏன்??
நோயாளி: நாய் ஓடி போய்டுச்சு டாக்டர்

லெட்டர் ல நிற்க நிற்கனு எழுதாதீங்க.
ஏன்?? பாவம் படிக்கிறவங்களுக்கு கால் வலிக்க போகுது

ஆசிரியர்: பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனை சுத்துமா??இல்லை சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியை சுத்துமா??
மாணவன்: எனக்கு தலை சுத்துது சார்

வக்கீல் : கொலை எங்கே நடந்தது??
சாட்சி: திருப்பதியில
வக்கீல்:இப்படி மொட்டையா சொன்னா எப்படி??

பெரியசாமி: எங்க தலைவர் திறந்த புத்தகம் மாதிரி
சின்னசாமி: அதான் நேத்து ரோட்ல போட்டு ஆளாளுக்கு புரட்டிக்கிட்டு இருந்தாங்களோ??

எல்லா மொழிகளையும் பேச கூயது எது??
எதிரொலி

பக்கத்து தியேட்டர்ல ஆட்டுகார அலமேலு படத்தை ஏன் எடுத்துட்டாங்க??
நம்ம தியேட்டர் ல பாயும் புலி ஒடுதுல்ல அதான்
கம்ப்யூட்டர் படிச்சாதான் இனிமேல் வேலை கிடைக்கும்
அப்ப நீ படிச்சா வேலை கிடைக்காத??

ஆசிரியர்: எங்கே ஆங்கில எழுத்துக்களை வரிசையா சொல்லு
மாணவன்: பி, சி, டி,எப்
ஆசிரியர்: டே! ஏன்டா முதல் எழுது ஏ விட்ட??
மாணவன்: அது வயது வந்தவங்களுக்கு மட்டும் சார்

பதில் எழுதும் முறை
ஒருவன் எழுதிய கடிதத்தின் கடைசி வரி,இந்த கடிதம் உனக்கு கிடைக்காவிட்டால் உடனே எனக்கு கடிதம் எழுது

பாத்திரம்
ஏங்க அண்டா குண்டா எல்லாம் விக்குறீங்க?? என்னோட பையன் பட்டணத்தில சின்ன பாத்திரத்துல நடிக்கிறானாம் .செலவுக்கு பணம் அனுப்ப சொன்னான்

படத்தின் முடிவில் தற்கொலை செய்துகொள்கிறார்
யார் வில்லனா?? கதாநாயகனா??
தயாரிப்பாளர்

வீட்டுக்கு போன மறந்தாபுல தூங்கிடுறேன் டாக்டர்....
நல்லதுதானே
திருட போன வீட்டுல தூங்கின மாட்டிக்க மாட்டேனா டாக்டர்

நீங்க சென்னை வாசிதானே??
எப்படி கண்டுபுடிசீங்க??
பைப்ல தண்ணி வரத கடவுள பாக்குற மாதிரி பாக்குறீங்க

ஆசிரியர்:ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு??
மாணவன்: ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார்

ஆசிரியர்:உண்மைக்கு எதிர்பதம் என்னனு உங்க பையன் கிட்ட கேட்டா தெரியலை சொல்லுறன்
அம்மா: ஆமாம் சார் அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார்

எக்ஸ்ட்ரா ப்ரீமியம் பெட்ரோல்....!

நம்ம மிஸ்டர். மொக்கை ஒருநாள் அலுவலகத்திலிருந்து களைப்பா வீட்டுக்கு வரும்போது, வழியில் ஒரு அழகான பொண்ணு, திரிஷா மாதிரி அழகுன்னு வச்சுக்கங்களேன்.. மொக்கையைப் பார்த்து கையசைத்து கூப்பிட்டாள்.. மொக்கை ஜொள்ளிகிட்டே போய் " வாட் கேன் ஐ டு ஃபார் யூ..?" என்று கேட்டார்..

ஹாய்.. ஹேண்ட்சம்..(????!).. ஒரு சின்ன ஹெல்ப்.. என் கார்ல பெட்ரோல் தீந்துடுச்சு.. கொஞ்சம் பங்க் வரை தள்ளிட்டு வரமுடியுமா..?

மொக்கை, வடிவேலு போல மனசுக்குள்ள, " ஹூக்கும்... எப்புடிதான் கண்டுபுடிக்கிறாளுகளோ...!"ன்னு நெனச்சுகிட்டாலும், வெளியில காட்டிக்காம "ஷ்யூர்.. வொய் நாட்..?"ன்னு சொல்லி தள்ள ஆரம்பிச்சார். த்ரிஷா ட்ரைவிங் சீட்ல உக்காந்துகிட்டு வண்டியை ஸ்டீயர் பண்ணுச்சு.

வண்டி தள்ளி... தள்ளி... மொக்கைக்கு நாக்கு தள்ள ஆரம்பிச்சுடுச்சு. ரொம்ப தூரம் தள்ளிட்டு வந்த மொக்கை, கொஞ்சம் பக்கவாட்டுல திரும்பிப் பார்த்தார்.. ஒரு பெட்ரோல் பங்கை தாண்டி வண்டி போய்கிட்டு இருக்கறதைப் பார்த்து கடுப்பாயிட்டார்.. உடனே தள்ளறதை நிறுத்திட்டு, முன்னால ஓடிப்போய்...

"ஏம்மா.. உனக்கே இது நல்லா இருக்கா..? அதோ ஒரு பங்க் இருக்குல்ல.. அங்க போகாம நீ பாட்டுக்கு போய்கிட்டு இருக்கியே.. என்று குமுறினார்..

"திரிஷா" சொன்னாள்.. " அந்த பங்க்ல எக்ஸ்ட்ரா ப்ரீமியம் பெட்ரோல் இருக்காது டார்லிங்.. சாதா பெட்ரோல் என் மாருதிக்கு ஒத்துக்காது.. அடுத்த தெருவில் ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு.. ப்ளீஸ்.. என் கண்ணுல்ல...கொஞ்சம் தள்ளிட்டு வாங்களேன் !"